பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்திரயான்-2 விண்ணில் செலுத்திய நாள் முதல்.. இன்று வரை நடந்தது என்ன? விண்வெளி துறையில் ஓர் மைல்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    விக்ரம் லேண்டருக்கு 21-ஆம் தேதி முதல் என்ன நடக்கும் தெரியுமா? விஞ்ஞானிகள் கவலை

    பெங்களூர்: விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ நிர்ணயித்த 14 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அதை கடைசி வரை தொடர்பு கொள்ள முடியாமல் விஞ்ஞானிகள் மனம் வருந்தியுள்ளனர்.

    நிலவின் தென் துருவத்தில் இதுவரை விண்கலத்தை அனுப்பி வெற்றி கண்ட நாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியன உள்ளன. இந்த நிலையில் அந்த சாதனையில் 4-ஆவது நாடாக இந்தியா கைகோர்க்கும் முயற்சியில் இறங்கியது.

    இதற்கு சந்திரயான்-2 என பெயரிடப்பட்டது. இந்த விண்கலம் ஏவப்பட்டது முதல் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி முடிவடைந்தது வரை கடந்து வந்த பாதை குறித்து காண்போம்.

    Timeline of Chandrayaan-2 as 14 day to reestablish communication with Vikram Lander ends today

    ஜூன் 12- நிலவை ஆய்வு செய்வதற்கான இரண்டாவது திட்டமான சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்தார்.

    ஜூன் 29- அனைத்து சோதனைகளும் நிறைவடைந்து விக்ரம் லேண்டருடன் பிரக்யான் ரோவர் இணைக்கப்பட்டது.

    ஜூன் 29- ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர், ஆர்பிட்டருடன் இணைக்கப்பட்டது

    ஜூலை 4- ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகியவற்றை சந்திரயான் 2 விண்கலத்தில் இணைக்கும் பணி நடைபெற்றது

    ஜூலை 7- ஜிஎஸ்எல்வி எம்1 ஏவுதளத்திற்கு கொண்டு வரப்பட்டது

    ஜூலை 14- சந்திரயான் 2வை விண்ணில் ஏவுவதற்காக கவுன்ட்டவுன் தொடங்கியது.

    ஜூலை 15- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் -2 விண்ணில் செலுத்தப்படவில்லை

    ஜூலை 18- சந்திரயான் 2-வில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு அது ஜூலை 22-ஆம் தேதி மதியம் 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் என இஸ்ரோ சிவன் அறிவித்தார்

    ஜூலை 21- சந்திரயான் -2 விண்கலத்தை செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது

    Timeline of Chandrayaan-2 as 14 day to reestablish communication with Vikram Lander ends today

    ஜூலை 22- சந்திரயான் -2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

    ஜூலை 24- பூமியிலிருந்து சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுப் பாதையை மாற்றும் பணி முதல் முறையாக வெற்றிகரமாக நடந்தது.

    ஜூலை 26- சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுப் பாதையை மாற்றும் பணி இரண்டாவது முறையாக வெற்றிகரமாக நடந்தது.

    ஜூலை 29- சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுப் பாதையை மாற்றும் பணி 3-ஆவது முறையாக வெற்றிகரமாக நடந்தது.

    ஆக.2- சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுப் பாதையை மாற்றும் பணி 4-ஆவது முறையாக வெற்றிகரமாக நடந்தது.

    ஆக.4- சந்திரயான் 2 விண்கலத்தால் பிடிக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது

    ஆக.6- சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுப் பாதையை மாற்றும் பணி 5-ஆவது முறையாக வெற்றிகரமாக நடந்தது.

    Timeline of Chandrayaan-2 as 14 day to reestablish communication with Vikram Lander ends today

    ஆக.14- நிலவின் சுற்று வட்டபாதையை மாற்றும் பணியை சந்திரயான் 2 வெற்றிக்கரமாக செய்தது

    ஆக.20- நிலவின் சுற்று வட்டபாதையில் சந்திரயான் 2 வெற்றிகரமாக நுழைந்தது.

    ஆக.22- எல் 14 கேமராக்கள் மூலம் 2,650 கி.மீ. உயரத்திலிருந்து நிலவின் முதல் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.

    ஆக. 26- டிஎம்சி -2 கேமரா மூலம் நிலவை படம் பிடித்து இரண்டாவது கட்ட புகைப்படங்களை சந்திரயான் -2 அனுப்பியது.

    செப். 2- ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது

    Timeline of Chandrayaan-2 as 14 day to reestablish communication with Vikram Lander ends today

    செப்.7- நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க தயாராக இருந்த விக்ரம் லேண்டர் 2.1 கி.மீ. உயரத்தில் இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    செப்.7- இணைப்பு துண்டிப்பால் மனமுடைந்த இஸ்ரோ சிவன் கண்ணீர் விட்டார். அப்போது அவரை கட்டி அணைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.

    செப். 7- நிலவில் 14 நாட்கள் மட்டுமே சூரிய ஒளி இருக்கும் என்பதால் அந்த காலகட்டத்துக்குள் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிக்கப்படும் என இஸ்ரோ சிவன் தெரிவித்தார்

    செப். 8- நிலவை 100 கி.மீ. தூரத்திலிருந்து சுற்றி வரும் ஆர்பிட்டர், லேண்டர் சாய்வாக விழுந்து கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டது. இதையடுத்து லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியது.

    Timeline of Chandrayaan-2 as 14 day to reestablish communication with Vikram Lander ends today

    செப். 17- இஸ்ரோவுடன் இணைந்து லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் நாசாவும் ஈடுபட்டது. நாசாவின் ரீகனசயனஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முயற்சி செய்தது.

    செப்.19- விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா அறிவித்தது. நாசாவின் ஆர்பிட்டரால் படம் எடுக்க முடியவில்லை என்றும் நாசா அறிவித்தது.

    செப். 21- விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அதை தொடர்பு கொள்ள முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். மேலும் சுகன்யான் திட்டத்தில் கவனம் செலுத்துவதாகவும் அறிவித்தார்.

     விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆர்பிட்டர்.. இஸ்ரோ சிவன் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆர்பிட்டர்.. இஸ்ரோ சிவன்

    English summary
    Here is the timeline for Chandrayaan-2 when it was commenced, Lander loses contact with ISRO upto Lander could not be communicated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X