பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூர் டிராபிக் போலீசா இது? கொஞ்சம் உத்துப்பார்த்தா.. அடடே, அடடா!

Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூர் டிராபிக் போலீசா இது? அட இது நல்லா இருக்கே !

    பெங்களூர்: மும்பையை போலவே, பெங்களூர் டிராபிக் நெரிசலும் உலகம் அறிந்த ஒரு விஷயம்தான். சென்னையை போன்ற புற நகர் ரயில் சேவை இல்லாத நகரம் பெங்களூர்.

    இப்போதுதான் ஓரளவுக்கு சில பகுதிகளில் மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. இன்னும் பல முக்கிய இடங்களில் மெட்ரோ ரயில் இயக்கம் துவங்கவில்லை.

    இதனால் நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படும். ஆபீஸ் போகும் அவசரத்தில் பலரும் சிக்னல்களை கூட மதிக்காமல், பாய்ந்து செல்வது டிராபிக் நெரிசலுக்கு மற்றொரு முக்கிய காரணம். இதனால் விபத்துகளும் அதிகரிக்கின்றன.

    வெட்கம் கெட்ட செயல்.. சோனியா காந்தி கடும் கோபம்.. காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஆவேச உரைவெட்கம் கெட்ட செயல்.. சோனியா காந்தி கடும் கோபம்.. காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஆவேச உரை

    புலி போல பாயும்

    புலி போல பாயும்

    அதேநேரம், டிராபிக் போலீசார் அந்த பக்கம் நின்றால், புலி போல் பாய்ந்து செல்லும் வாகன ஓட்டிகளும், பூனை போல பதுங்கி கொள்வர். எனவேதான், ஆடுகிற மாட்டை ஆடி கறக்கனும் என்ற சொலவடைக்கு ஏற்ப, பெங்களூர் போலீசார், ஒரு நூதன திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

    பொம்மைகள்

    பொம்மைகள்

    ஜவுளிக்கடைகளில் பொம்மைகளை வைத்திருப்பார்களே அதுபோன்ற பொம்மைகளை வாங்கி, அதற்கு டிராபிக் போலீஸ் சீருடை அணிவித்து, பெங்களூர் நகரின் பல பகுதிகளிலும் முக்கிய சாலை சந்திப்புகளில் அந்த பொம்மைகளை நிறுவியுள்ளனர்.

    ஏமாறுவார்களா

    ஏமாறுவார்களா

    சட்டென்று பார்த்தால் ஒரு போலீஸ்காரர் நிற்பதை போலவே இருக்கும். எனவே, பயந்து போய் வாகன ஓட்டிகள் ஒழுங்காக செல்வார்கள் என்பது இந்த திட்டம். ரெசிடென்சி சாலை உட்பட பல முக்கிய சந்திப்புகளில், இதுபோன்ற டம்மி பொம்மைகள் நிறுவப்பட்டுள்ளன.

    காலக்கொடுமை

    காலக்கொடுமை

    விளைநிலங்களில் பறவைகளை விரட்டத்தான், பொம்மைகளை நிறுவுவதை பார்த்துள்ளோம். ஆனால் ஆறறிவுள்ள மனிதர்களும், விதிமுறைகளை மதிக்காமல் செல்வதால், பறவைகளை கையாளுவதை போல பொம்மைகளை வைத்து டிராபிக்கை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர் போலீசார்.

    English summary
    Dolls dressed up as traffic cops in various points across busy junctions in Bengaluru to control traffic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X