பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்டை மாநிலங்களில் கொரோனா தீவிரம் - கர்நாடகாவிற்குள் நுழைய கடும் கட்டுப்பாடு அமல்

கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாலை, ரயில் மற்றும் விமானம் என எந்த வழியாக வந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என கர்நாடகா மாநில அரசு தெரிவத்துள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாலை, ரயில் மற்றும் விமானம் என எந்த வழியாக வந்தாலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கர்நாடகா மாநில அரசு தெரிவத்துள்ளது. இன்று முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிதும் குறைந்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Travellers from Maharashtra to Submit Negative Report Before Entering Karnataka

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் புதிதாக 6,281 பேருக்கும், கேரளாவில் 4,650 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அண்டை மாநிலங்களையும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்நாடகாவில் தலபாடி, சரத்கா, நெட்டானிக் - மத்நுரு, ஜல்சூர் ஆகிய 4 எல்லைகளை தவிர்த்து மற்ற அனைத்து எல்லைகளையும் மூட அம்மாநில மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாலை, ரயில் மற்றும் விமானம் என எந்த வழியாக வந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என கர்நாடகா மாநில அரசு தெரிவத்துள்ளது. இன்று முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 7ல் அறிவிக்க வாய்ப்பு : பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு5 மாநில சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 7ல் அறிவிக்க வாய்ப்பு : பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

கேரளாவை ஒட்டியுள்ள கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்கக்கூடிய கோவிட்-19 நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.

கர்நாடகா மாநிலத்திற்குள் வரும் பயணிகள் சாலை, ரயில், விமானம் என எந்த வழியாக வந்தாலும் கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

கேரளாவில் இருந்து கர்நாடகா வருவோர் முக்கியமான நான்கு செக்போஸ்ட்கள் வழியாக மட்டுமே வர முடியும். மற்ற எல்லைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நான்கு செக்போஸ்ட்கள் வழியாக வரும் போது மருத்துவர்களால் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். தக்‌ஷின கன்னடா மாவட்ட துணை ஆணையர் கே.வி.ராஜேந்திரா தெரிவித்துள்ளார்.

English summary
Travellers from Maharashtra, who enter Karnataka through the border at Afzalpura and Aland have to sumbit RT-PCR negative test.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X