பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது சசிகலா வெளியே வருகிறாரா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே.. டிடிவி தினகரன்

Google Oneindia Tamil News

பெங்களூர்: சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவதற்கு எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையில் சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அரசியலில் பல்வேறு சறுக்கல்களை டிடிவி தினகரன் சந்தித்து வருகிறார். அதிமுகவை கைப்பற்றுவதாக கூறி, கடைசியில் புதிய கட்சியை தொடங்கினார். மக்களவை தேர்தல், சட்டசபை இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அமமுக வெற்றி பெறவில்லை.

"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா?".. கரூரை கலக்கும் எஸ்பி!

செய்திகள்

செய்திகள்

இதனால் சசிகலா, டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சசிகலா சிறையில் நன்னடத்தை காரணமாக அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்ற செய்திகள் வெளிவந்தன.

பெங்களூரில்

பெங்களூரில்

இவரது வரவை அதிமுகவினர் தடுத்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் பெங்களூரில் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து விட்டு வெளியே வந்தார்.

பரோல்

பரோல்

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சசிகலா வெளியே வர கோரிக்கை விடுக்கவில்லை. சசிகலா பரோலில் வருவதற்கு தற்போது எந்த காரணமும் இல்லை.

தண்ணீர் பிரச்சினை

தண்ணீர் பிரச்சினை

பிரதமர் மோடி கேட்பது போல் அனைத்து மசோதாகளுக்கும் எதிர்க்கட்சிகள் செவி சாய்க்காது. தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போர்க் கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

English summary
TTV Dinakaran says that there is no such necessity for Sasikala to come in Parole and also she has not applied for the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X