பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூர் உட்பட கர்நாடகாவில் கடும் கெடுபிடி.. மக்கள் நடந்தே போகனும்.. பைக், காரில் சென்றால் பறிமுதல்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட 21 நாள் நாடு தழுவிய லாக்டவுனுக்கு இடையே, பாஸ் இல்லாமல் யாரும் பைக், கார் இயக்க கூடாது, அப்படி இயக்கினால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருந்தாலும், பறிமுதல் செய்யப்படும் என்று கர்நாடக போலீசார் எச்சரித்துள்ளனர்.

Recommended Video

    இதுக்கு மேலே எந்த போலீஸாலும் மக்களுக்கு அறிவுரை சொல்ல முடியாது | ONEINDIA TAMIL

    கர்நாடக போலீஸ் டிஜிபி வெளியிட்ட ஒரு ட்வீட்டில், "இது ஏப்ரல் ஃபூல் குறும்பு அல்ல. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இரு/நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் ஒழுங்குமுறையை நீங்கள் மீறி நடந்தால், நாங்கள் உங்கள் வாகனத்தை பறிமுதல் செய்வோம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Two and four wheelers banned on roads in Karnataka

    ஏற்கெனவே பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் காவல்துறையினர் பைக்குகளை பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளனர்.

    எம்எல்ஏக்களை சந்தித்த அனுமதி மறுப்பு.. பெங்களூரு ராமதா ஹோட்டல் முன் திக்விஜய் சிங் தர்ணா எம்எல்ஏக்களை சந்தித்த அனுமதி மறுப்பு.. பெங்களூரு ராமதா ஹோட்டல் முன் திக்விஜய் சிங் தர்ணா

    "இரண்டு நாட்களுக்கு முன்பே, இதுதொடர்பாக, உத்தரவு கொடுத்தோம். நாங்கள் ஏற்கனவே 5200 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். மளிகை கடைக்கு நடந்து செல்லுங்கள், வாகனத்தை பயன்படுத்த வேண்டாம்" என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.

    ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எல்லா ஏரியாவிலும் எல்லா கடையும் திறந்து இல்லை. முதியவர்கள், உடல் உபாதை உள்ளவர்கள் எப்படி வாகனம் இன்றி அங்கே சென்று பொருள் வாங்க முடியும் என மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

    கர்நாடகாவில் சில பகுதிகளில், சமூக பரவல் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதாவது கொரோனா 3வது ஸ்டேஜ் சென்றுவிட்டதாக சந்தேகம் உள்ளது. எனவேதான், காவல்துறை கடுமை காட்டத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    English summary
    This is not an April Fool's prank. Two/ four wheelers are banned from use till the 14th of April. We will SEIZE your vehicle if you CEASE to ignore this lockdown regulation, says Karnataka police DGP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X