• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நடுவானில் மோதல்.. தடுமாறி விழுந்த விமானங்கள்.. கிளம்பிய புகைமூட்டம்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

|
    நேருக்கு நேர் மோதிய இந்திய ஏர்போர்ஸ் விமானங்கள்-வீடியோ

    பெங்களூர்: பெங்களூரில் இன்று நடைபெற்ற இந்திய விமானப்படையின் விமான சாகச, ஒத்திகையின்போது சூரிய கிரன் பிரிவைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டு கீழே விழுந்து வெடித்தன.

    பெங்களூரு எலகங்கா பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விபத்து சில பார்வையாளர்களின் செல்போன்களில் வீடியோவாக பதிவாகி, வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Two IAF Surya Kiran hawk aircraft have crashed- Video

    நடுவானில் இரு விமானங்கள் மோதி கொண்டு காகிதத்தால் செய்யப்பட்ட விமானங்கள் காற்றில் தடுமாறுவது போல தடுமாறி கீழே விழுவதும், அதன் பிறகு அங்கேயிருந்து மிகப்பெரிய புகைமூட்டம் எழுவதும் வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளது.

    இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கு தொடர்ந்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து எல்லை பகுதியில், நடைபெற்ற குண்டுவெடிப்பில் ராணுவ மேஜர் பலியானார். பின்னர் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது 4 இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி ஒரு பைலட் பலியாகியுள்ளார். 2 விமானிகள் பத்திரமாக தப்பினர்.

    விமான சாகச கண்காட்சி நாளை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Two IAF Surya Kiran hawk aircraft have crashed during rehearsals for Aero India Show in Bengaluru. Air Show to be held on Feb 20-24.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X