பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் சிறை மாற்றத்தால் பெரும் சிக்கல்.. 121 கைதிகளில் 2 பேருக்கு கொரோனா.. அச்சத்தில் ராம்நகரா

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு இல்லாத ராமநகரா மாவட்டத்திற்கு 121 சிறைக்கைதிகள் அண்மையில் மாற்றப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததால் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    இந்தியாவில் கொரோனா second wave தாக்கும்

    இதில் கொடுமை என்னவென்றால் 121 சிறை கைதிகளும் மிகச்சிறிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களில் அதிகமானோருக்கு எதிர்வரும் நாட்களில் கொரோனா பாசிட்டிவ் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய இரண்டு சிவப்பு மண்டல மாவட்டங்களுக்கு இடையில் உள்ள ராமநகரா மாவட்டத்தில் இதுவரை ஒரு கொரோனா வைரஸ் நோயாளிகள் கூட இல்லாமல் இருந்தனர். கொரோனா இல்லாத கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களில் ராமநகரா மாவட்டமும் ஒன்றாக இருந்தது.

    திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா

    காவல்துறையினர் மீது தாக்குதல்

    காவல்துறையினர் மீது தாக்குதல்

    இந்த வார தொடக்கத்தில், புருஹத் பெங்களூரு மகாநகர பலிகேவில் (பிபிஎம்பி) ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அடையாளம் காணப்பட்ட பதாராயணபுரத்தில் உள்ளூர்வாசிகள், கொரோனா உள்ளதா என்பதை கண்டறியும் தொடர்பு-தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு எதிராக கோபம் அடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரையும் தாக்கினர்.

    ராமநகரா சிறை

    ராமநகரா சிறை

    இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட பலரையும் கர்நாடக போலீசார் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் பலரை பெங்களூருவில் இருந்து அண்டை மாவட்டமான ராமநகராவுக்கு மாற்ற கர்நாடக போலீஸ் முடிவு செய்தது. இதன்படி பெங்களூருவில் இருந்து 121 கைதிகள் ராமநகர மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டனர்.

    பலருக்கும் பரவும் அபாயம்

    பலருக்கும் பரவும் அபாயம்

    ஆனால் அடுத்த சில நாட்களில் பெரும் சர்ச்சைக்கு அது வழிவகுத்தது, அவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது சோதனையில் உறுதியானது. இந்நிலையில் அனைத்து கைதிகளும் மிகச் சிறிய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். எனவே அவர்களில் அதிகமானோருக்கு வரும் நாட்களில் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. பசுமை மண்டலமாக இருந்த ராம்நகரா கொரோனா பாதிப்பு மாவட்டமாக மாறி உள்ளது.

    மிகக்சிறிய சிறை

    மிகக்சிறிய சிறை

    இதற்கிடையே ராம்நகரா சிறையில் 10 முதல் 15 பேர் ஒரு அறையில் என ஒவ்வொரு செல்லிலும் கைதிகள் மொத்தம் மொத்தமாக அடைக்கப்பட்டிருந்தனர். இதனால் அச்சம் அதிகரித்துள்ளது. அத்துடன் பெங்களூருவில் இருந்து ராம்நகராவுக்கு கைதிகளை மாற்றும் போது போலீஸ் சூப்பரண்டு உள்பட காவல்துறை அதிகாரிகள் சிலரும் இருந்தனர். அவர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர். அத்துடன் சிறை வார்டன்கள், துப்புரவு பணியாளர்கள், சமையலர்கள் என பலரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த சிறை மாற்றத்தால் கர்நாடாகவில் கொரோனா தொற்று பெரிய அளவில் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. ராம்நகரா சிறையில் இருந்து கைதிகளை உடனே மாற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்குவேன் என முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரித்துள்ளார்.

    English summary
    Two Prisoners Shifted from Bengaluru to 'Green' District of Ramanagara Test Positive for Coronavirus posstive
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X