பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரி நேரம்.. உன் டிரஸ்ஸை கிழிக்க போறேன்.. இளம்பெண்ணை மிரட்டிய ஊபர் டிரைவர்!

இளம்பெண்ணை ஊபர் டிரைவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

பெங்களூரு: "வண்டியை விட்டு கீழே இறங்கிறியா.. இல்லே, உன் டிரஸ்ஸை கிழிக்கட்டுமா" என்று கால்டாக்சி டிரைவர் ஒரு இளம்பெண்ணை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பெங்களூரில் போன சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு நடந்த சம்பவம் இது! தோழிகளை சந்தித்து பேசிய இளம் பெண், கிளம்பும்போது ஊபர் கேப் ஒன்றினை புக் செய்தார். கொஞ்ச நேரத்தில் புக் செய்த கேப் வந்ததும் அதில் ஏறிக் கொண்டார்.

அந்த கால் டாக்சி டிரைவரோ, யாருக்கோ போனை போட்டு, "வண்டியில் ஏறியுள்ள பெண் கஸ்டமர் ரொம்ப மோசம்" என்பது போல புகார் சொல்லியவாறே வந்தார்.

செல்போன்

செல்போன்

இதை கேட்டதும் அந்த பெண்ணுக்கு தூக்கி வாரிப்போட்டது. இருந்தாலும் அமைதியாக உட்கார்ந்திருந்தார் அந்த பெண். ஆனால் அந்த டிரைவர், பேசிக் கொண்டிருந்த செல்போனை கட் செய்துவிட்டு, அந்த பெண்ணிடம், "இனி இப்படி வெளியில போய்விட்டு, தண்ணி அடித்துவிட்டு வண்டியில வராதீங்க" என்றார்.

கஸ்டமர் கேர்

கஸ்டமர் கேர்

அதற்கு அந்த பெண், "உங்க வேலையை பாருங்க.. இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாதது" என்றார். உடனே டிரைவர் வண்டியை ஓரங்கட்ட போகவும், அந்த பெண் எமர்ஜென்ஸி பட்டன் ஆப்பை போனில் அழுத்திவிட்டார். உடனே டிரைவருக்கு கஸ்டமர் கேரில் இருந்து போன் வந்து, விவரம் கேட்டனர்.

கஸ்டமர் கேர்

கஸ்டமர் கேர்

அதற்கு அந்த டிரைவர், இளம் பெண் குடித்துவிட்டு வந்திருப்பதாக புகார் சொன்னார். உடனே போனை புடுங்கிய இளம்பெண், "எப்படியாவது எனக்கு உதவுங்க" என்று கேட்டுக் கொள்ள, அந்த வண்டியை விட்டு கீழே இறங்கிவிடுமாறும், வேறு ஒரு வண்டியை அனுப்பி வைப்பதாகவும் கஸ்டமர் கேரில் இருந்து பதிலளித்தனர். இதை பார்த்ததும் டிரைவருக்கு இன்னும் டென்ஷன் ஆகிவிட்டது. "வண்டியை விட்டு கீழே இறங்கிறியா, இல்லைன்னா, உன் டிரஸ்-ங்களை கிழிக்கட்டுமா" என்று மிரட்டலாக பேசி உள்ளார்.

மிரட்டல்

மிரட்டல்

இதைக்கேட்டு அந்த பெண் கேபில் இருந்து இறங்கி கொண்டார். அப்போதுதான் தெரிந்தது, அந்த இடம் ஒரு கும்மிருட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்றும் நேரம் ராத்திரி 11.15 என்பதும். நின்று நின்று பார்த்தால், சொன்னபடி இன்னொரு வண்டியும் அனுப்பி வைக்கவில்லை. அதனால் நண்பர்களுக்கு போன் பண்ணி அவர்களை வரவழைத்து, வீட்டுக்கு போய் சேர்ந்தார் இளம்பெண்.

English summary
In Bengaluru, Uber Driver says will tear clothes and threatens woman customer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X