பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் கட்டிடம் இடிந்து விபத்து.. சிக்கிய 70 பேர்.. மீட்கப்பட்ட 37 பேர்.. 2 பேர் பலி!

கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் இடிபாடுகளில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.

நேற்று மாலைதான் இந்த சம்பவம் நடந்தது. இன்னும் அங்கு மீட்பு பணிகள் இதனால் நடந்து வருகிறது. மொத்தம் 6 ஜேசிபி வாகனங்கள், 3 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

கர்நாடகாவில் தார்வாட் பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இடிந்து விழுந்தது 6 மாடி கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்தது.

யார் போட்டியிட போவது? மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் யார்? இன்று அறிவிக்கிறார் கமல்ஹாசன்! யார் போட்டியிட போவது? மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் யார்? இன்று அறிவிக்கிறார் கமல்ஹாசன்!

எப்போது

சில நாட்களுக்கு முன் இதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. நேற்று அடுத்தகட்ட பணிகளுக்காக இன்று மீண்டும் கட்டுமானம் தொடங்கியது. அப்போது ஊழியர்கள் கீழ் தளத்தில் இருக்கும் போது கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது.

எத்தனை பேர் மீட்பு

இடிபாடுகளுக்கு உள்ளே 70 மக்கள் வரை சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கு தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை 37 பேர் மட்டுமே மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

தடை

தடை

மீட்கப்பட்ட சிலர் பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் பாலியாகி உள்ளனர். அந்த பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணை செய்யப்படும்

விசாரணை செய்யப்படும்

இந்த இடிபாடு எதனால் நிகழ்ந்தது என்று இன்னும் முழுமையான விவரம் வெளியாகவில்லை. இடிபாட்டிற்கான காரணத்தை ஆராய அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

English summary
Karnataka: Rescue operation is still underway in Dharwad's Kumareshwar Nagar where an under-construction building collapsed last night. An NDRF team is also participating in the operation. At least 37 people have been rescued so far. 2 people have died in the collapse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X