பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரசாயனம் மற்றும் உரங்கள் துறையை மீண்டும் நிர்வகிக்க உள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா

Google Oneindia Tamil News

Recommended Video

    Cabinet Ministers List: மத்திய அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?.. முழு தகவல்- வீடியோ

    பெங்களூரு: மோடி அமைச்சரவையில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சராகியுள்ள சதானந்த கவுடாவிற்கு, கடைசியாக அவர் பொறுப்பு வகித்த ரசாயனம் மற்றும் உரங்கள் துறையே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதனையடுத்து பிரதமராக நேற்று மோடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து மொத்தம் 57 மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

    Union Minister sadananda gowda has to re-manage the chemical and fertilizer sector

    பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களின் துறைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய பாஜக தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான சதானந்த கவுடாவிற்கு, ரசாயனம் மற்றும் உரங்கள் துறையே மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது.

    சதானந்த கவுடா 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்தில் தற்போதைய தட்சிண கன்னடா எனப்படும் தெற்கு கன்னடம் மாவட்டத்தில் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய சதானந்த கவுடா சட்டப்படிப்பை முடித்த பின்னர், 1976-ம் ஆண்டு சட்ட பயிற்சியை துவக்கினார். பின்னர், அவர் சுல்லியா மற்றும் புட்டூர் இரண்டிலும் பயிற்சி சட்டப்பயிற்சியை மேற்கொண்டார். டேட்டி என்பவரை மணந்த சதானந்த கவுடாவிற்கு 2 மகன்கள் உள்ளனர்.

    அமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடுஅமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு

    கவுடா சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை மக்களின் நலன் மீது அக்கறை கொண்டதால் அவர்களின் நலன்களுக்காக அரசியலில் காலடி வைக்க முடிவு செய்தார். மேலும் அவரது கல்லூரி நாட்களிலிருந்து அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. கல்லூரி மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் சதானந்த கவுடா இருந்துள்ளார்

    நேரடி அரசியலில் ஈடுபட விரும்பிய அவர் தனது வழக்கறிஞர் வேலையில் இருந்து விலகி 1970-களின் பிற்பகுதியில் ஜன சங்கம் அமைப்பில் சேர்ந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அவர் கட்சியின் சுலியா சட்டமன்ற பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பின்னர் அவர் பாஜக உறுப்பினராக ஆனார். அதன் பின்னர் தக்ஷினா கன்னட பா.ஜ.க இளைஞர் மோர்ச்சா ஜனாதிபதியாகவும், பின்னர் தக்ஷினா கன்னட பாஜக துணைத் தலைவராகவும் ஆனார். 1994ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் கவுடா பெற்ற வெற்றி அவரது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது.

    பின்னா் கர்நாடகா மாநில சட்டமன்றத்தில் பல பதவிகளை கவுடா ஆக்கிரமித்தார். அவரின் திறமையை அங்கீகரித்த கட்சி தலைமை அவரை தேசிய செயலாளராக நியமித்தது. தொடர்ந்து பல பொறுப்புகளை திறம்பட கையாண்ட சதானந்த கவுடாவை 2006-ம் ஆண்டில் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராக பாஜக நியமித்தது.

    பின்னர் 2011ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் கர்நாடக முதல்வர் பதவியையும் சதானந்த கவுடா வகித்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் வெற்றி பெற்று மோடியின் அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் சதானந்தா கவுடா ரயில்வே அமைச்சராக பதவியேற்றார்.

    மோடி அரசில் செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றங்களின் போது சட்டம் மற்றும் நீதி அமைச்சராகவும், புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சராகவும், இறுதியாக ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போதைய மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மக்களவை உறுப்பினரானார்.

    நன்கு திறமையாக செயல்படுபவர், பல்வேறு தளங்களிலும் தனது திறமையை வெளிகாட்டுபவர் என்ற அடிப்படையில் மீண்டும் சதானந்த கவுடாவிற்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Sadananda Gowda, who is the Union Minister for the second time in the Modi cabinet, has finally managed chemicals and fertilizers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X