India
  • search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்டிப்பிடித்து.. பைக்கில் போன ஸ்வேதா.. நடுரோட்டில் "அது" தொப்பென்று விழுந்து.. என்னாச்சு..!

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஒரு குற்றத்தை மறைக்க முயன்றபோது, இன்னொரு குற்றத்தில் வசமாக சிக்கி கொண்டது 4 பேர் கொண்ட ஒரு கொடூர கும்பல்...!

பொதுவாக, பைக்கில் சடலங்களை வைத்து கொண்டு ​போகும் நிகழ்வு சமீபகாலமாக அரங்கேறி வருகிறது.. முக்கியமாக, கொரோனா பிரச்சனை நமக்கு வந்ததில் இருந்து இப்படி ஒரு, அவலம் நடந்து கொண்டிருக்கிறது.

அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.! அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

உரிய நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வராமல், அல்லது ஆம்புலன்ஸ் தட்டுப்பாடுகள் காரணமாக, பிணங்களை பைக்கில் வைத்து கொண்டு போய் அடக்கம் செய்த சம்பவம் நம் நாட்டிலேயே ஆங்காங்கு நடந்தது.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

4 நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்தது.. ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் உயிரிழந்த மகனின் உடலை பைக்கில் வைத்து, 90 கி.மீ தூரம் கொண்டு சென்றார் பெற்ற தந்தை.. இந்த வீடியோ இணையத்திலும் வெளியாகி காண்போரை கலங்க வைத்தது.. அந்த 2 வயது குழந்தை தெருவில் விளையாடிக்கொண்டிருந்தது.. 2 வயது பெண் குழந்தை கால் இடறி குழிக்குள் விழுந்து இறந்துவிட்டது.. ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் கேட்டும் இல்லை என்று சொல்லிவிட்டனர்.

 குழந்தையின் சடலம்

குழந்தையின் சடலம்

இறந்து போனவர்களை அழைத்து செல்ல, அந்த ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் தர மாட்டார்களாம்.. அதனால், குழந்தையின் உடலை பைக்கில் வைத்து அழைத்து சென்றுள்ளார்.. அதேபோல ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.. பிணத்தை வைத்து எடுத்து சென்றுள்ளார் ஒருவர்.. ஆனால், அதற்கான காரணங்கள்தான் பகீரை கிளப்புகிறது.

ஸ்வேதா

ஸ்வேதா

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரின், முத்துராயன நகரை சேர்ந்தவர் ஸ்வேதா... இவரது தோழியின் பெயர் துர்கி... ஸ்வேதாவிடம் துர்கி கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார்.. ஆனால் அந்த கடனை அவர் திருப்பி தரவில்லை.. இதனால், அது அவர்களுக்குள் மோதலாக வெடித்தது.. இறுதியில், துர்கி தன்னுடைய கணவர் ரகுவுடன் சேர்ந்து, ஸ்வேதாவை அடித்து கொன்றுவிட்டார்.. இதற்கு நண்பர்கள் வினோத், நாகராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

பிணம்

பிணம்

கொலை செய்தபிறகுதான் யோசித்தார்கள், ஸ்வேதாவின் சடலத்தை எங்கே வீசுவது என்று.. ஒரே குழப்பமாகிவிட்டது.. பிறகு வேறு வழியில்லாமல், ஊருக்கு வெளியே வீசிவிடலாம் என்று முடிவு செய்து, இறந்த ஸ்வேதா பிணத்தை ஒரு பைக்கில், உட்கார வைத்தனர்.. அப்படியே தோளோடு தோள் சாய்வதுபோல், அதாவது ஸ்வேதா தூங்குவது போல் செட்டப் செய்து உடம்பை பைகோடு சேர்த்து கட்டினர்..

 ஸ்வேதா சடலம்

ஸ்வேதா சடலம்

அதன்பிறகு பைக் கிளம்பியது.. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த பைக் விபத்தில் சிக்கிவிட்டது.. இதில், பைக்கில் இருந்த ஸ்வேதா சடலம் நடுரோட்டில் தொப்பென்றுவிழுந்தது.. விபத்து ஏற்பட்டுவிட்டதால், போலீசார் நிலைமையை சரிசெய்ய வழக்கம்போல் ஓடிவந்தனர்.. வந்தபிறகுதான் தெரிந்தது, விழுந்தது பிணம் என்று.. உடனே அவர்களை துருவி துருவி கேட்டபோதுதான், பெண்ணை கொலை செய்ததே இவர்கள்தான் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, வினோத், நாகராஜ், துர்கி, ரகு ஆகியோரை சென்னப்பட்டணா போலீசார் கைது செய்தனர்.. தொடர்ந்து விசாரணை நடக்கிறதாம்..!

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, கொலை செய்யப்பட்டு, வீட்டுக்குள்ளேயே 8 மணி நேரமாக சடலத்தை வைத்துள்ளார்கள்.. எங்கே எடுத்து சென்று குழம்பிய பிறகுதான், 2 நண்பர்களுக்கு போனை போட்டு வரவழைத்துள்ளனர்.. 4 பேருமே 2 பைக்கில் கிளம்பி ரகு, துர்கா ஒரு பைக்கும், வினோத் நாகராஜ் இன்னொரு பைக்கும் எடுத்து கொண்டு கிளம்பி உள்ளனர்.. இதில், சவுமியா உடலை வினோத் இறுக்கி பிடித்து கொண்டுள்ளார்..

சிகிச்சை

சிகிச்சை

40 கிமீ தூரம் போன பிறகுதான் அந்த விபத்து நடந்துள்ளதாம்.. அதுவும் விடிகாலை 2 மணிக்கு விபத்து நடந்துள்ளது.. இவர்கள் போன வேகத்துக்கு, பைக் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் போய் அங்கிருந்த சுவற்றில் மோதி விழுந்துள்ளனர்.. வினோத், நாகராஜ் வண்டியில்தான் விபத்து ஏற்பட்டு அவர்கள் இருவருமே குப்புற விழுந்து பலத்த காயமடைந்துள்ளனர்.. அத்துடன் கீழே விழுந்ததுதான் ஸ்வேதாவின் சடலமும்.. பிறகு போலீசார் அவர்களை ராமநகரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.

English summary
very strange incident in bengaluru road and why did police arrest four
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X