பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆர்பிட்டர்.. இஸ்ரோ சிவன்

Google Oneindia Tamil News

Recommended Video

    விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை..இஸ்ரோ சிவன் பேட்டி வீடியோ

    பெங்களூர்: விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார்.

    சந்திரயான் 2 வில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கடந்த 7-ஆம் தேதி நிலவில் மென்மையான முறையில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் தரையிறங்கும் பகுதிக்கு 400 மீட்டர் தொலைவில் இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நிலவில் 14 நாட்கள் மட்டுமே சூரிய ஒளி இருக்கும் என்பதால் லேண்டருடனான தொடர்பை எப்படியாவது ஏற்படுத்திவிடலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    யோவ் என்னய்யா அது.. கருப்பா ஏதோ பறக்குதே.. அமெரிக்கா வெளியிட்ட பரபர படம்!யோவ் என்னய்யா அது.. கருப்பா ஏதோ பறக்குதே.. அமெரிக்கா வெளியிட்ட பரபர படம்!

    நாசா முயற்சி தோல்வி

    நாசா முயற்சி தோல்வி

    இதற்காக இஸ்ரோவின் அனுமதியின் பேரில் நாசாவும் விக்ரமை தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஏற்கெனவே நாசாவால் அனுப்பப்பட்ட ரீகனயசன்ஸ் ஆர்பிட்டரை அனுப்பி லேண்டரை படம் பிடிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது. நாசாவின் ஆர்பிட்டர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நிலவை சுற்றி வருகிறது.

    தொடர்பு கொள்ளமுடியவில்லை

    தொடர்பு கொள்ளமுடியவில்லை

    ஆர்பிட்டரில் உள்ள 8 கருவிகளும் நன்றாக பணியாற்றுகிறது. அந்த 8 கருவிகளும் எதற்காக பொருத்தப்பட்டனவோ அதை செய்கின்றன. எனினும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

    தொடர்பு கொள்ளமுடியவில்லை

    தொடர்பு கொள்ளமுடியவில்லை

    ஆர்பிட்டரில் உள்ள 8 கருவிகளும் நன்றாக பணியாற்றுகிறது. அந்த 8 கருவிகளும் எதற்காக பொருத்தப்பட்டனவோ அதை செய்கின்றன. எனினும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

    அடுத்த திட்டம்

    அடுத்த திட்டம்

    எங்களது அடுத்த திட்டமான ககன்யான் திட்டம் எனப்படும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் கவனம் செலுத்துவோம் என்றார். நிலவில் இன்று முதல் சூரிய வெளிச்சம் நீங்கி இருள் சூழும். மேலும் உறைபனியும் இருக்கும் என்பதால் இனி லேண்டரை தொடர்பு கொள்வது கடினம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் மீண்டும் 14 நாட்கள் கழித்து சூரிய ஒளி நிலவில் படும்போது லேண்டர் பனியில் உறைந்திருக்கும் என்பதால் இந்த 14 நாட்களில் தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் முயற்சித்தனர். ஆனால் அது முடியவில்லை.

    English summary
    ISRO Chief K Sivan says that Chandrayaan-2 orbiter is doing very well. There are 8 instruments in the orbiter. Each instrument is doing exactly what it meant to do. we have not been able to establish communication with Vikram Lander. Our next priority is Gaganyaan mission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X