பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை வழியில் பெங்களூரு... பெங்களூருவாசிகள் ஊருக்குள் வர எதிர்ப்பு.. கர்நாடகா கிராமங்களில் தண்டாரோ

Google Oneindia Tamil News

பெங்களூரு: சென்னையைப் போல் பெங்களூருவிலும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் வருகிறது. இதனால் பெங்களூருவை கர்நாடகாவின் கிராம பகுதிகளில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுளளது.

பெஙகளூரு மற்றும் மைசூரில் இருந்து யாரும் வர வேண்டாம்.. வந்தால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என கர்நாடகா கிராம பஞ்சாயத்துகளில் தண்டோரா போடப்படுகிறது. இதனால் பெங்களூரு மற்றும் மைசூரில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னைவாசிகள் யாரையும் ஊருக்குள் விட வேண்டாம் என்றும் அப்படி மீறி சென்னைவாசிகள் வந்தால் அவர்களை பற்றி உடனே தகவல்க தெரிவிக்குமாறும் தமிழகத்தின் சில கிராமங்களில் வெளிப்படையாக தண்டோரா போடப்பட்டது.

தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா!தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா!

கிராமங்களில் எதிர்ப்பு

கிராமங்களில் எதிர்ப்பு

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பெங்களூருவில் தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் பெங்களூருவில் ஒரே நாளில் 800 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது. இது வரை பெங்களூருவில் கொரோனா தொற்றால் 11361 பேர் பாதிக்கப்பட்டுளளனர். இதனால் பெங்களூருவில் இருந்து யார் வந்தாலும் ஊருக்குள் விட வேண்டாம் என கர்நாடகா கிராமங்களில் தணடோரா போடப்படுகிறது.

பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு

பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு

மாண்டியா அருகே உள்ள கிராம பஞ்சாயத்துகளில், பெங்களூருவில் இருந்து யாரும் வர வேண்டாம் என்றும் மீறி வந்தால் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போடப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் பெங்களூருவில் இருந்து வரும் பேருந்துகளை மக்கள் அனுமதிக்க மறுத்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளது.

மக்கள் அச்சம்

மக்கள் அச்சம்

ஊருக்குள் யாராவது பெங்களூரு வாசிகள் தப்பி தவறி தெரியாமல் வந்தால் உடனே கிராம மக்கள், சுகாதார துறையிடம்ஒப்படைத்து விடுகிறார்கள. கிட்டத்தட்ட சென்னைவாசிகளின் நிலைதான் பெங்களூருவாசிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மக்கள் பெங்களூருவாசிகளை கண்டுஅச்சம் அடைந்து வருகிறார்கள். இதனால் தற்போதைய நிலையில பெங்களூரு மற்ற பகுதிகளில் இருந்து முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

காவல் காக்கும் மக்கள்

காவல் காக்கும் மக்கள்

கர்நாடகாவில் பல மாவட்டங்களில் நிலைமை நன்றாக இருப்பதால் அன்லாக் 2வின் படி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பெங்களூருவில் இருந்து கொரோனா வந்துவிடும் என பயந்து பல்வேறு மாவட்டங்களில் லாக்டவுனை நீட்டித்துள்ளன. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில கிராமங்களில் எல்லைக்குள் புதிதாக யாரும் வந்துவிடாத வண்ணம் வீட்டு ஒருவர் என 24 மணி நேரமும் காவலுக்கு ஆள் போட்டு கண்காணித்து வருகிறார்கள். கிராமத்தை விட்டுயாரும் வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.

புறக்கணிக்கப்படும் பெங்களூரு

புறக்கணிக்கப்படும் பெங்களூரு

பெங்களூரு போய் வந்தவர்களால், பெங்களூரில் இருந்து வருபவர்களால் கொரோனா ஊருக்குள் பரவகிறது என்ற நம்பிக்கை கர்நாடகாவின் கிராமங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் சொந்தமாகவே இருந்தாலும் பெங்களுருவாசிகளை மக்கள் புறக்கிணக்கின்றனர்.அவர்களை ஒதுக்குகின்றனர். இது பெங்களூரு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிக்மங்களூரு போன்ற சுற்றுலாதளங்களில் வெளிப்படையாகவே பெங்களூருவாசிகள் வருதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மக்கள் வேதனை

மக்கள் வேதனை

கொரோனா அச்சம் காரணமாக பெங்களூரிலிருந்து பலர் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப முயற்சிக்கும் நேரத்தில், அவர்களை ஊருக்குள் விடக்கூடாது என சொந்த கிராம மக்களே எதிராக திரும்பியிருப்பது அவர்களின் கவலையை அதிகரித்துள்ளது. ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து வாடகை கொடுக்க முடியாமல் கடந்த 3 மாதங்களாக அவதிப்பட்ட மக்கள் பெங்களூர நகரை விட்டு வெளியேறி சொந்த ஊர் போய் பிழைக்கலாம்என்ற எண்ணி வெளியேற தொடங்கி உள்ளனர்.இந்த நேரத்தில தான் இப்படி ஒரு எதிர்ப்பு கர்நாடகாவில் கிளம்பி உள்ளது.

English summary
in a village in kanataka, between the cities of Bengaluru and Mysuru, a representative of the panchayat goes around beating drums and announcing: "People from Bengaluru and Mysuru, do not come here. If you do, you will be fined Rs 5,000."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X