பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர், போலீஸ் மீது மக்கள் தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் பாதராயனபுரா பகுதியில், போலீஸ் செக் போஸ்ட்டுகள் மீது ஏரியா மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தங்கள் பகுதி கொரோனா பாதிப்பு காரணமாக சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

Recommended Video

    கொரோனா தடுப்பில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர், போலீஸ் மீது மக்கள் தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு

    பெங்களூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பாதராயணபுரா. இது கொரோனா ஹாட்ஸ்பாட் ஏரியாக்களில் ஒன்று. மேலும், சீல் வைக்கப்பட்ட பகுதியாகும். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்த 58 இரண்டாவது வகை தொடர்புடையவர்களை மருத்துவமனை அழைத்துச் செல்ல நேற்று இரவு, சுகாதார பணியாளர்கள் சென்றனர். அவர்களை, அங்கேயுள்ள மக்கள் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. போலீஸ் தடுப்பு செக் போஸ்டுகளையும் தாக்கியுள்ளனர்.

    Violent protests erupted in Bengaluru’s Padarayanapaura

    இதையடுத்து கூடுதல் காவல்துறை குவிக்கப்பட்டனர். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பகுதியில், 10த்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். ஒரே கட்டிடத்தில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐசிஎம்ஆர்.. இந்தியாவில் 80% நோயாளிகளுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புஅதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐசிஎம்ஆர்.. இந்தியாவில் 80% நோயாளிகளுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு

    இந்த சம்பவம் பற்றி மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்திர முகர்ஜி கூறுகையில், சம்பவம் பற்றி முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளேன். தக்க நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கும். இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது, இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Violent protests erupted in Bengaluru’s Padarayanapaura area late on the night of Sunday, 19 April.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X