பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கபினி அணையில் இருந்து 70,000 கன அடியும், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து 73,000 கன அடியும் நீர் திறப்பு

Google Oneindia Tamil News

பெங்களூரு: காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 70,000 கன அடி நீரும், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து 73,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது நேற்று வரை 1.19 லட்சம் கன அடியாக இருந்தது. தற்போது, கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 73,000 கன அடி நீர் திறப்பும், கபினி அணையில் இருந்து 70,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

water from Karnataka to cauvery increased as 1.50 lakh cusecs mettur dam receives more water

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, ஹாரங்கி அணைகள் நிரம்பியுள்ளன. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலையில் 116.30 அடிக்கு நீர் இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55,563 கன அடியாக உள்ளது.

கா்நாடக அணைகளின் உபரிநீா் மேட்டூா் அணைக்கு வியாழன் முதல் வரத் தொடங்கியுள்ளது. நீா்வரத்து அதிகரிப்பதால் மேட்டூர் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 67.97 அடியாக உயா்ந்துள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கன மழை.. பல பகுதிகளில் வெள்ளம்.. நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கன மழை.. பல பகுதிகளில் வெள்ளம்.. நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் இன்று மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து விநாடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் 70.05 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது, மேட்டூர் அணையில் 32.74 டி.எம்.சி. நீர் இருப்பு தற்போது உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஒகேனக்கல்லின் அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

English summary
water from Karnataka to cauvery increased as 1.50 lakh cusecs mettur dam receives more water
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X