பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்களும் "டாக்டர்" தான்.. எங்களுக்கும் ஆபரேஷன் தெரியும்.. ஸ்லீப்பர் செல்லும் இருக்கு.. குமாரசாமி

Google Oneindia Tamil News

பெங்களூரு: எங்களுக்கும் ஆபரேஷன் பண்ண தெரியும், பாஜகவில் எங்களுக்கும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி, பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் மாநில சட்டப் பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் ஆளுநர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க பல நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார்.

We also have sleeper cells in BJP, says Kumarasamy

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் வெளியேறினார் எடியூரப்பா. அதன் பின் இரண்டாவது இடத்தை பிடித்த காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தை பிடித்த மத சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைத்தன.

ஆட்சி அமைந்த அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது பாஜக. இதற்காக ஆப்பரேசன் தாமரை என்ற பெயரில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது கர்நாடக பாஜக. இதில் பலமுறை பாஜகவின் மூக்கு அறுபட்டுள்ளது. இருந்தாலும் சளைக்காமல் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் எடியூரப்பா.

ஆகாயம் மேலே.. பாதாளம் கீழே.. சூடான சமோசாக்கள் ராகுல் காந்தி கையிலே!ஆகாயம் மேலே.. பாதாளம் கீழே.. சூடான சமோசாக்கள் ராகுல் காந்தி கையிலே!

தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் முடிந்தபின்னர் காங்கிரஸ் + ம.ஜ.த. ஆட்சி கவிழும். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எங்களோடு தொடர்பில் உள்ளார்கள் என்று பேசி வருகிறார் எடியூரப்பா. இந்த நிலையில் காங்கிரசில் பதவி பறிக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிஹோளி பாஜகவில் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில் கர்னாடக முதல்வர் குமாரசாமி அதிரடி காட்டியுள்ளார்.

பாஜகவில் 10 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளார்கள் என்று கூறிய அவர் எங்களுக்கும் ஸ்லீப்பர் செல்கள் உள்ளார்கள். பாஜக எங்களுக்கு எதிராக ஏதாவது செய்ய நினைத்தால் நாங்கள் யார் என்பதை காண்பிக்க வேண்டியதிருக்கும் என்று குமாரசாமி தரப்பு கூறிவருகிறது.

இது குறித்து பேசிய முதல்வர் குமாரசாமி பாஜக ஆட்சியை கவிழ்க்க என்ன செய்ய நினைக்கிறதோ அதை நாங்கள் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்காது. எங்களாலும் பாஜக கையாளும் தந்திரங்களை கையாள முடியும் என்று கூறியுள்ளார். இதனால் கர்நாடக அரசியல் கோடை வெப்பத்தையும் தாண்டி தகித்து வருகிறது.

எடியூரப்பா காங்கிரஸ் கூட்டணி அரசில் இடியாப்ப சிக்கலை ஏற்படுத்துவாரா, அதை முதல்வர் குமாரசாமி சமாளிப்பாரா என்பது தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் தெரியவரும்.

English summary
Karnataka CM HD KUmarasamy has said that his party is also having some sleeper cells in BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X