பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்கள் துறவிகள் அல்ல அரசியல்வாதிகள்.. குமாரசாமி ஆட்சி தொடர கூடாது என்பதே விருப்பம்.. பாஜக தலைவர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்தின் கருத்துக்கு எஸ்.வி சேகர் பதிலடி | காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழு வாய்ப்பு?

    பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருவர் அம்மாநில பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதால், அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் பாஜக 25 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதனால் அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் மஜத கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    kumaraswamy

    காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினமா செய்துவிட்டு, பாஜகவில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரபரபப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களான ரமேஷ் ஜார்கிஹளி மற்றும் சுதாகர் ஆகிய இருவரும், பாரதிய ஜனதா மூத்த தலைவர் அசோக்கை சந்தித்து பேசியுள்ளனர்.

    பாஜக மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் தீவிரமாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அசோக், கட்சி விவகாரம் குறித்து பேசவே கிருஷ்ணாவை சந்திக்க வந்ததாக கூறினார். தற்போது எங்களுக்கு கர்நாடக பேரவையில் 105 சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் உள்ளது.

    தேசிய அளவிலும் பாஜக பெரும் சாதனை படைத்துள்ளது. நாங்கள் ஒன்றும் சன்னியாசிகள், அல்ல அரசியல்வாதிகள் தான். மக்கள் செல்வாக்கு இல்லாத குமாரசாமி அரசு கர்நாடகத்தில் தொடர கூடாது என்பதே எங்கள் விருப்பம் என்றார். விரைவில் கர்நாடகத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்றார்.

     அப்பக் கூட அவங்கதான் இதை செஞ்சுக்கணுமா.. ரொம்ப சிறப்பான கொள்கை.. என்ன சொல்கிறார் எஸ்வி சேகர் அப்பக் கூட அவங்கதான் இதை செஞ்சுக்கணுமா.. ரொம்ப சிறப்பான கொள்கை.. என்ன சொல்கிறார் எஸ்வி சேகர்

    பாஜக தலைவர்களுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருவரும், எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல்நலம் குறித்து விசாரித்து போகவே வந்ததாக குறிப்பிட்டனர். பாஜக-வின் ஆபரேஷன் தாமரை பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது என கூறினர்.

    மேலும் எடியூரப்பா இங்கு வந்தது பற்றியும் தங்களுக்கு தெரியாது. எஸ்.எம்.கிருஷ்ணாவை தவிர்த்து வேறு யாரையும் தாங்கள் சந்திக்கவில்லை என்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு முன் பேசிய பாஜக மூத்த தலைவர் சதானந்த கவுடா, 48 மணி நேரத்தில் குமாரசாமி அரசு கவிழும் என்றார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக மூத்த தலைவர்களை பகிரங்கமாக சந்தித்து பேசியுள்ளது கர்நாடக அரசியல் களத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது.

    English summary
    Congress MLAs in Karnataka have met senior leaders of the BJP and consulted on the political front
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X