பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜக-விற்கு வந்தால் ஆட்சியமைக்க தயார்.. எடியூரப்பா அதிரடி

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணியில் இருக்கும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள், அவர்களாகவே பாஜக-விற்கு வந்தால், நாங்கள் ஆட்சியமைக்க தயாராக உள்ளதாக எடியூரப்பா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரை கூட, குமாரசாமி தனது அமைச்சரவையில் சேர்க்கவில்லை.

We are ready to rule in Karnataka .. Yeddyurappa Interview

இரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே, அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். ஏற்கனவே அமைச்சர் பதவி கிடைக்கவில்லையே என்ற அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மஜத உறுப்பினர்கள், இதனால் மேலும் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்பபடுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பாஜக மாநில தலைவரான எடியூரப்பா, எக்காரணத்தை கொண்டும் கூட்ணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என திட்டவட்டமாக கூறினார்.

லோக்சபாவில் மதரீதியான முழக்கங்களுக்கு அனுமதி இல்லை: சபாநாயகர் ஓம் பிர்லா லோக்சபாவில் மதரீதியான முழக்கங்களுக்கு அனுமதி இல்லை: சபாநாயகர் ஓம் பிர்லா

ஆனால் காங்கிரஸ் - மஜத கட்சியினர் இடையே தற்போது பதவிக்காக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நாங்கள் ஏன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட வேண்டும்.

மேற்கண்ட இரு கட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இவர்கள் தற்போது என்ன யோசித்து கொண்டிருக்கிறார்கள், என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பதை காலம் தான் தீர்மானிக்கும். கர்நாடக மக்களும் இந்த அரசு எப்போது கவிழும் என்றே எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்றார் எடியூரப்பா.

குமாரசாமி தலைமையிலான ஆட்சி மீது அதிருப்தியில் உள்ள எம்எல்ஏ-க்கள் பலரும் உரிய நேரத்திற்காக காத்து கொண்டிருப்பதாக தெரிகிறது. எதிர்வரும் காலத்தில் கர்நாடக அரசின் நிலைமை என்னவாகும் என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

மேலும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி, ஊழல்வாதிகளுக்கு துணை போவதாக குற்றம்சாட்டி அக்கட்சியின் விஸ்வநாத் குற்றம்சாட்டியுள்ளதும் கவனிக்கத்தக்கது. இதிலிருந்தே குமாரசாமி ஆட்சியில் ஊழல் கரைபுரண்டோடுவது புலனாகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

ஐஎம்ஏ நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1,230 கோடி முறைகேட்டில், ஆளும் கூட்டணி அரசை சேர்ந்த கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் என பலருக்கும் தொடர்பு உள்ளது என புகார் கூறியுள்ளார். மக்கள் முதலீடு செயத் பணத்தை அவர்களுக்கு திருப்பி அளிக்க, ஆட்சியில் உள்ளவர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்க, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் ஜிந்தால் நிறுவனத்திற்கு சுமார் 3,000 ஏக்கர் நிலம் ஒதுக்கியிருக்கும் விவகாரத்தில், பெரும் பணம் கைமாறியுள்ளது. எனவே தான் இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்க குமாரசாமி அரசு தயங்குகிறது என்று எடியூரப்பா சாடியுள்ளார்.இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார் எடியூரப்பா.

English summary
Yeddyurappa has stirred up dissatisfaction with the Congress coalition ruling the state of Karnataka, saying that if the MLAs come to the party, we are ready to rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X