பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்டம்: பெங்களூருவில் லட்சக்கணக்கானோர் பிரமாண்ட போராட்டம்- என்ஆர்சியை புறக்கணிக்க முடிவு

Google Oneindia Tamil News

பெங்களூரு: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பெங்களூரு ஈத்கா மைதானத்தில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் என்.ஆர்.சிக்கான ஆவணங்களை சமர்பிக்கப் போவதில்லை எனவும் இப்போராட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன. பெங்களூரூவில் ஈத்கா மைதானத்தில் 35 இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் பங்கேற்றார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது பதவியை ராஜினாமா செய்தவர் சசிகாந்த் செந்தில்.

என்.ஆர்.சி. புறக்கணிப்பு

என்.ஆர்.சி. புறக்கணிப்பு

ஈத்கா மைதானப் பொதுக்கூட்டத்தில் பேசிய சசிகாந்த் செந்தில், என்.ஆர்.சி..கான எந்த ஆவணங்களையும் நாங்கள் தரப்போவது இல்லை. அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்கிற முடிவை நாம் எடுத்திருக்கிறோம். இந்த அரசாங்கத்தின் முகத்தில்தான் குடியுரிமை சட்ட திருத்தத்தை வீசி எறிய வேண்டும்.

தடுப்பு முகாம் செல்ல தயார்

தடுப்பு முகாம் செல்ல தயார்

என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை புறக்கணிப்பேன். இதற்காக குடியுரிமை அற்றவர்களுக்கு என உருவாக்கப்படும் தடுப்பு முகாமில் அடைத்தாலும் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

பாஜக சான்று தேவை இல்லை

பாஜக சான்று தேவை இல்லை

இதில் பங்கேற்று பேசிய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியத்தின் உறுப்பினர் மவுலானா தன்வீர் பீர் ஹஸ்மி, எங்களது குடியுரிமைக்காக பாஜகவிடம் இருந்து நாங்கள் சான்றிதழ் பெற வேண்டிய அவசிய்ம் இல்லை. நாங்கள் விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரிய பங்களிப்பு செய்தவர்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அப்படியான பங்களிப்பை செய்துவிடவில்லை என்றார்.

தேசத்தை நேசிப்பவர்கள்

தேசத்தை நேசிப்பவர்கள்

சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், உங்கள் உடைகளையும் முகங்களையும் பார்க்கிறேன். இங்கே பொதுவான என் கண்ணில்படுவது எல்லாம் இந்த தேசத்தை நேசிக்கின்ற மக்களாகத்தான் இருக்கின்றீர்கள்.

எங்கள் தேர்வு

எங்கள் தேர்வு

தேசப் பிரிவினையின் போது என்னைப் போன்றவர்கள் இந்தியாவிலேயே தங்குவது என ஒரே ஒரு வாய்ப்பைத்தான் தேர்வு செய்தோம். இத்தனைக்கும் உங்களது முன்னோர்களுக்கு பாகிஸ்தானுக்கு இடம்பெயருவதற்கான வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் உங்கள் முன்னோர்கள் மதச்சார்பற்ற இந்தியாவில்தான் இருப்போம் என இங்கேயே இருந்தனர்.

பாஜகவின் பெயரை மாற்ற வேண்டும்

பாஜகவின் பெயரை மாற்ற வேண்டும்

பாஜகவைப் பொறுத்தவரை முகமது அலி ஜின்னாவின் இருநாட்டு கொள்கையை பின்பற்றுகிறது. அதனால் பாஜகவின் பெயரை பாரதிய ஜின்னா கட்சி என மாற்றம் செய்து கொள்ளலாம். குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். நாடு முழுவதும் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவதை ஏற்க முடியாது என்றார்.

English summary
Former IAS Officer Sashikanth Senthil said that he would boycott the NRC and was Ready to be locked up in a detention centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X