பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா.. பொழுதை கழித்தது எப்படி?.. என்னென்ன கற்றார்?

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா இந்த மூன்றரை ஆண்டுகளில் என்னென்ன கற்றுக் கொண்டார் தெரியுமா?

ஜெயலலிதா சசிகலா இருவரும் உடன்பிறவா சகோதரிகளாகவே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்த சசிகலாவும் சிறை செல்ல தீர்ப்பளிக்கப்பட்டது.

உடன் அவர் ரூ 10.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 4 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனையில் சிறையில் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் சசிகலா இருந்து வருகிறார்.

விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா.. தொண்டர்களை பார்த்தவுடன் இறங்கி நடந்தே பயணம்விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா.. தொண்டர்களை பார்த்தவுடன் இறங்கி நடந்தே பயணம்

அபராதத் தொகை

அபராதத் தொகை

அவரது விடுதலையையொட்டி அவரது அபராதத் தொகையான ரூ 10 கோடியை செலுத்திவிட்டார். எனினும் அவர் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத் துறை தெரிவித்துள்ளது. சிறைக்கு செல்வதற்கு முன்னர் ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தார்.

நிச்சயம்

நிச்சயம்

இதனால் அவரது வருகையானது நிச்சயம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. கட்சியையும் ஆட்சியையும் பிடிப்பேன் என சத்தியம் செய்தாரா, இல்லை சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்த திமுகவை அழிப்பேன் என சூளுரைத்தாரா என தெரியவில்லை. ஆனால் அவர் வெளியே வந்தால் நிச்சயம் ஏதாவது ஒன்று நடக்கும் என தெரிகிறது.

ஆபரேட்

ஆபரேட்

அதற்கு அச்சாரமாக சிறையில் சில விஷயங்களை சசிகலா கற்றுக் கொண்டுள்ளார். அப்படி அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை பார்ப்போம். அரை ஏக்கரில் பப்பாளி மரங்களை சசிகலா பயிரிட்டு நட்டு வைத்துள்ளார். அது போல் கன்னட மொழி படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து கணினியை எப்படி ஆபரேட் செய்வது என்பதை கற்றுக் கொண்டுள்ளார்.

பொறுமை

பொறுமை

மேலும் கைத்தொழிலையும் அவர் திறம்பட கற்றுக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் அறிவுத் திறன், பொறுமை உள்ளிட்டவற்றை கண்டுக் கொண்டுள்ளார். எனவே அவர் வெளியே வந்தால் தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Sasikala learns Kannada and computer classes in Parappana Agrahara prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X