பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்பரை பாருங்க.. குமாரசாமி அரசு காலி.. ஏற்கனவே 'ஆட்சியை பிடிச்சாச்சு' எடியூரப்பா!

Google Oneindia Tamil News

Recommended Video

    கலங்கி நிற்கும் குமாரசாமி...கர்நாடகாவில் திடீர் திருப்பம்

    பெங்களூர்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர் குமாரசாமி.

    ஒன்றல்ல, இரண்டல்ல, காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய கூட்டணி கட்சிகளை சேர்ந்த மொத்தம், 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அதில் 15 பேர் உச்சநீதிமன்றம் சென்று, அதன் மூலம், விப் உத்தரவில் இருந்து விலகி இருக்கலாம் என்ற பெரும் சட்ட ரீதியிலான பலனை பெற்றுவிட்ட நிலையில் குமாரசாமி அக்னி பரிட்சையில் இறங்க உள்ளார்.

    What do the Karnataka assembly numbers look like now?

    சட்டசபையில் நாளை நம்பர் கேம் மட்டுமே எஞ்சியிருக்கும். எனவே அங்கு வேறு பேச்சுக்கு இடமில்லை.

    சட்டசபையில் தற்போதைய பலம் என்ன, குமாரசாமி அரசை காப்பாற்ற தேவைப்படும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை என்ன என்பது பற்றி ஒரு பார்வை இதோ:

    * கர்நாடக சட்டசபையின் மொத்த எம்எல்ஏக்கள் பலம் 224. நியமன எம்எல்ஏ 1.

    * பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான மேஜிக் நம்பர் 113.

    * காங்கிரசுக்கு 78, மஜதவுக்கு 37, பகுஜன் சமாஜ் 1, கர்நாடக பிரக்யாவந்த ஜனதா கட்சி மற்றும் 1 சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு கூட்டணி அரசுக்கு இருந்தது.

    * தற்போதைய நிலையில், மற்ற கட்சியினர் விட்டு விலகி விட்டனர். காங்கிரசின் 13 எம்எல்ஏக்கள், மஜதவின் 3 எம்எல்ஏக்கள் என 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர்

    * 16 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றால், சட்டசபையின் பலம், 208 என குறையும்

    * 208 எம்எல்ஏக்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் எண் 105 என்ற அளவுக்கு, குறையும்.

    * ஆனால் காங்கிரஸ் மஜத கூட்டணியின் பலம் 100 என்ற அளவில் இருக்கும், பாஜகவிற்கு 105 எம்எல்ஏக்கள் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழும்

    * குமாரசாமி ஆட்சி கலைந்ததும், எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்கள் பலம் அவர்களிடம் உள்ளது

    English summary
    In all, 16 MLAs — 13 from the Congress and three from JD(S) — have quit since July 7, pushing the coalition government to the brink of collapse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X