"கவர்ச்சி".. சொக்க வைத்த ஆஷா.. மயங்கிய நபர்.. "பெரியம்மா"வுக்கு விபரீத ஆசை.. கடைசியில் பார்த்தால்..?
பெங்களூரு: உயிருக்கு உயிராய் காதலித்து திருமணம் செய்ய நினைத்தபோது, மணமகள் வீட்டில் உறவினர்கள் யாருமே திருமணத்தில் பங்கெடுக்காததால் இளைஞர் ஒருவர் அதிர்ந்து போனார்.
கர்நாடக மாபிலம் மாண்டியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள நாகமங்களாவை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. 25 வயதாகிறது..
3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!
இவருக்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண் அறிமுகமாகி உள்ளார்.. அவர்தான் முதலில் பிரண்ட்ஸ் ரிக்வெஸ்ட் தந்துள்ளார்.. அதில் இருந்த கவர்ச்சியான போட்டோவை பார்த்ததுமே, இளைஞர் குஷியாகிவிட்டார்.

ஆஷா
உடனே லைக்ஸ் தந்து, அந்த பெண்ணை நட்பில் இணைத்து கொண்டார்.. பிறகு அந்த பெண்ணை பற்றின விவரங்களை ஒவ்வொன்றாக அவரிடமே விசாரிக்க ஆரம்பித்தார்.. அந்த பெண்ணுக்கு 23 வயதாகிறதாம்.. துமகூவை சேர்ந்தவர் என்பன போன்ற பல விஷயங்களை அந்த பெண்ணை பற்றி தெரிந்து கொண்டார்.. பிறகு ஆஷா, தன்னுடைய செல்போன் நம்பரை இளைஞருக்கு தந்தார்.. அதேபோல இளைஞரும் செல்போனை தந்தார்.. இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசினார்கள்.

திடீர் காதல்
நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியது.. ஒருகட்டத்தில் ஆஷா, தன்னுடைய வீட்டு கஷ்டங்களை எல்லாம் இளைஞரிடம் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்.. இதனால் ஆஷாவின் மீது இளைஞருக்கு பரிதாபமும் அனுதாபமும் அதிகமானது.. கொஞ்சம் கொஞ்சமாக பண உதவி செய்ய ஆரம்பித்தார்.. இப்படியே 3.50 லட்சம் ரூபாய் வரை ஆஷாவுக்கு பேங்க்கில் இருந்து பணம் அனுப்பினார்.. இதுபோக, 30 ஆயிரம் ரூபாய்க்கு ஆஷா வீட்டுக்கு மளிகை பொருட்களையும் வாங்கி தந்தார்.

திருமணம்
வறுமையில் கஷ்டப்படும் ஆஷாவை திருமணம் செய்யவும் முடிவெடுத்தார்.. தன் விருப்பத்தை ஆஷாவிடம் சொல்லவும், ஆஷா அதற்கு சம்மதம் சொன்னார்.. அதன்படி, ஆஷாவின் பெரியம்மா மட்டும், இளைஞர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, நிச்சயம் செய்தார்.. அன்றைய தினமே திருமணத்துக்கு நாளும் குறிக்கப்பட்டுவிட்டது.. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.. மே 20ல் ஆதிசுஞ்சனகிரியின், கால பைரவேஸ்வரர் சுவாமி கோவிலில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்யாண மண்டபம்
அதன்படியே, அன்றைய தினம், மண்டபம் முழுக்க இளைஞரின் குடும்பத்தினர், உறவினர்களும் சூழ்ந்திருந்தனர்.. ஆனால், மணமகள் குடும்பத்தில் யாரையுமே காணோம்.. அன்றைக்கு நிச்சயதார்த்தத்தை முன்னின்று நடத்திய அந்த பெரியம்மா மட்டும் வந்திருந்தார்.. இதனால் சந்தேகமடைந்த மாப்பிள்ளை, அந்த பெரியம்மாவை துருவிதுருவி விசாரித்தார்.. அப்போதுதான் அந்த அதிர்ச்சி தெரியவந்தது.

ஆஷா
நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்த அந்த பெரியம்மாதான் ஆஷாவாம்.. ஃபேஸ்புக்கில் பார்த்து பழகிய அதே ஆஷாதான்.. ஆனால், 50 வயசாகிறதாம்.. நேரில் ஆஷாவை பார்த்ததும், மாப்பிள்ளைக்கு நெஞ்சுவலி வராத குறைதான்.. இப்படி ஏமாந்துவிட்டோமே என்று அதிர்ந்து போனார்.. போலீசாரும் திருமண மண்டபத்துக்கு வந்து இதை பற்றி விசாரித்தனர்..

அதிர்ச்சி
ஆனால், ஆஷா பற்றி போலீசில் எந்த புகாரும் மாப்பிள்ளை தரவில்லை.. அதற்கு பதிலாக, அந்த பெண்ணை போலீசார் எச்சரித்தனர்.. இளைஞரிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக எழுதி வாங்கிக் கொண்டு அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.. ஆனால், முகத்தை கூட பார்க்காமல் ஒரு பெண்ணுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து, அதுவும் மளிகை சாமான்களையும் வாங்கி தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மாப்பிள்ளை மீளவே இல்லை..!