பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்திரயான் 2 பின்னடைவு.. சர்வதேச மீடியாக்கள் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிப்பு

    பெங்களூர்: நிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்துடன் இணைந்த லேண்டர், விஞ்ஞானிகளிடமிருந்து, தனது தொடர்பை இழந்துள்ளது.

    இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தாலும்கூட, நாசா உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி விண்வெளி ஆய்வு நிலையங்களும், நிலவு ஆய்வு பணியின் போது பல முறை தோற்றுத்தான் இறுதியில் சாதித்துள்ளனர் என்பதை மறக்க இயலாது.

    இந்தியாவைப் பொறுத்த அளவில், விண்வெளி ஆய்வுக்கு மிக குறைந்த அளவுக்கு பணத்தையே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை வைத்துக் கொண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

    அன்று இஸ்ரேலுக்கும் இதே சோகம்தான்.. விக்ரமுக்கும் இப்படித்தான் நடந்திருக்குமோ?அன்று இஸ்ரேலுக்கும் இதே சோகம்தான்.. விக்ரமுக்கும் இப்படித்தான் நடந்திருக்குமோ?

    சர்வதேச ஊடகங்கள்

    சர்வதேச ஊடகங்கள்

    ஏனெனில் நிலவை சுற்றி வருமாறு ஆர்பிட்டர் வெற்றிகரமாக தனது பணியை செய்யத் தொடங்கியுள்ளது. லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும்தான் சிக்னல்களை அனுப்பவில்லை. எனவே இது 95 விழுக்காடு வெற்றி என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனிடையே சர்வதேச ஊடகங்கள் இஸ்ரோவின் இந்த முயற்சி தொடர்பாக இன்று எந்த மாதிரி செய்தி வெளியிட்டு உள்ளன என்பதை பார்க்கலாம்.

    ரிஸ்க்கான பணி

    ரிஸ்க்கான பணி

    அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான, சிஎன்என் தனது இணையதளத்தில், "இந்தியாவின் ரிஸ்கான நிலவு லேண்டிங் தோல்வி அடைந்திருக்கலாம்", என்று தலைப்பிட்டு செய்தி வழங்கியுள்ளது. இதன் துணை தலைப்பில் "சந்திரயான் 2 தொடர்பு இணைப்பு பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெருங்கியபோது துண்டிப்பு

    நெருங்கியபோது துண்டிப்பு

    இங்கிலாந்து நாட்டின் முன்னணி ஊடகமான பிபிசி, தனது இணையதளத்தில், "நிலவுடனான தொடர்பை இந்தியா இழந்து விட்டது, இதுவரை ஆராயப்படாத நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 2 ஆய்வு செய்ய நெருங்கியபோது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    ஆய்வு நடக்கிறது

    ஆய்வு நடக்கிறது

    அமெரிக்காவின் முன்னணி நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் தனது இணையதளத்தில், "இந்தியாவின் சந்திரயான்-2 தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது, இதுதொடர்பான டேட்டா ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

    இஸ்ரோ தலைவர்

    இஸ்ரோ தலைவர்

    சவுதி அரேபியாவில் முன்னணி ஆங்கில நாளிதழான, தி கலீஸ் டைம்ஸ், தனது இணையதளத்தில் "விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    What the international media outlets saying about Chandrayaan 2 lander issue? here is the detail report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X