பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலா எப்போது விடுதலை ஆவார்?.. ஆர்டிஐ கேள்வி.. பெங்களூர் மத்திய சிறைச்சாலை அதிரடி பதில்!

சசிகலாவின் விடுதலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூர் மத்திய சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: சசிகலாவின் விடுதலை குறித்து கேட்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கு பெங்களூர் மத்திய சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

Recommended Video

    Sasikala விடுதலை எப்போது ? Bangalore மத்திய சிறை நிர்வாகம் பதில்

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்ற மூன்று வருடம் ஆகிவிட்டது.

    When Sasikala will get released? Bangalore central prison answers for RTI

    இதனால அவர் எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னும் சில மாதங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவர் சிறையில் இருந்து வெளிய வந்ததும் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சசிகலா எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார் என்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. பெங்களூரை சேர்ந்த டி நரசிம்ம மூர்த்தி இந்த கேள்வியை எழுப்பி இருந்தார்.

    When Sasikala will get released? Bangalore central prison answers for RTI

    இதற்கு பெங்களூர் மத்திய சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், ஒரு கைதியை ரிலீஸ் செய்யும் தேதி பல்வேறு விஷயங்களை வைத்து தீர்மானிக்கப்படும். இதற்காக பல விதிமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். ஒரு கைதி தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டாரா என்பது தொடங்கி பல விஷயங்களை வைத்து அவரின் ரிலீஸ் தேதியை தீர்மானிப்போம்.

    ஒரே நாளில் அதிர்ச்சி.. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 4ம் இடம்.. யுகேவை முந்தியது!ஒரே நாளில் அதிர்ச்சி.. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 4ம் இடம்.. யுகேவை முந்தியது!

    இதனால் சசிகலா ரிலீஸ் ஆககும் தேதி குறித்து இப்போது அறிவிக்க முடியாது என்று பெங்களூர் மத்திய சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

    English summary
    When Sasikala will get released? Bangalore central prison answers for RTI query,.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X