பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கர்நாடகா முதல்வர்.. யார் இந்த பசவராஜ் பொம்மை.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதல்வராக பாஜக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் பசவராஜ் பொம்மை. லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை எடியூரப்பாக முதல்வராக முன்மொழிந்தார். இவர் தற்போது சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சராக உள்ளார்.

Recommended Video

    Who Is Basavaraj Bommai | Karnataka new CM

    பசவராஜ் பொம்மை, உடுபபி மற்றும் ஹாவேரி உடுப்பி மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சராகவும் பதவி விகித்துள்ளார். முன்னதாக நீர்வளத்துறை மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    கர்நாடகாவின் ஹூப்ளியில் 1960ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்தவர் பசவராஜ் பொம்மை. கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்ஆர் பொம்மையின் மகன் தான் இந்த பசவராஜ் பொம்மை. அவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐக்கிய ஜனதா தளததில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

    கர்நாடக அரசியலில் திருப்பம்.. முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை! நாளை பதவியேற்பு கர்நாடக அரசியலில் திருப்பம்.. முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை! நாளை பதவியேற்பு

    சட்ட அமைச்சர்

    சட்ட அமைச்சர்

    தர்வாட் தொகுதியில் இருந்து 1998ம் ஆண்டு முதல் 2004 வரை கர்நடாகா சட்டமேலவை உறுப்பினராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2008ம் ஆண்டு பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். 2008ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் காவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகான் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார். தற்போது சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சராக உள்ளார்.

    முன்னோடி

    முன்னோடி

    பிஇ பட்டதாரியான பசவராஜ் பொம்மை விவசாயமும் செய்து வருகிறார். இவர் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் எண்ணற்ற நீர்ப்பாசன திட்டங்களை கொண்டுவந்தார். கர்நாடகாவில் நீர்ப்பாசன விஷயங்களைப் பற்றி தீவிரமாக அறிந்து வைத்துள்ள இவர் கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகானில் இந்தியாவின் முதல் 100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்தியவர் ஆவார்.

    ராஜினாமா

    ராஜினாமா

    கர்நாடகாவில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள நிலையில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை 75வயதை கடந்துவிட்டதால் கட்சி கொள்கை படி ராஜினாமா செய்ய வைத்தனர்.

    முதல்வரானார்

    முதல்வரானார்

    இந்நிலையில் அதே சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. 2023ல் தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடாகவின் 20 முதல்வர்களில் 8 பேர் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    English summary
    history of Newly Elected Chief Minister of Karnataka Basavraj Bommai. read the Basavraj Bommai Family Details and bio.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X