பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லேண்டருடன் தொடர்பை பெற இஸ்ரோவுக்கு நாசா உதவுவது ஏன்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    லேண்டர் உடனான தொடர்பு 2.1 கி.மீ. தொலைவில் துண்டிக்கப்படவில்லை... பரபரப்பு தகவல்

    பெங்களூர்: சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இஸ்ரோ முயற்சிப்பது சரி. அது ஏன் நாசாவும் அத்தொடர்பை பெற மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

    சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் கடந்த 7-ஆம் தேதி தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தொலைவில் இருந்த போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

    லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் அதனுடனான தொடர்பை பெற இஸ்ரோ முயற்சித்து வருகிறது.

    திமுகவை சீண்டும் கூட்டணி கட்சி எம்.பி...! அறிவாலயம் வரை சென்ற பஞ்சாயத்துதிமுகவை சீண்டும் கூட்டணி கட்சி எம்.பி...! அறிவாலயம் வரை சென்ற பஞ்சாயத்து

    லேண்டர் கருவி

    லேண்டர் கருவி

    இஸ்ரோவின் சந்திரயான் -2 முயற்சியை பாராட்டிய அமெரிக்க ஆய்வு மையமான நாசா, எதிர்கால திட்டங்களில் கைகோர்ப்போம் என தெரிவித்திருந்தது. இதையடுத்து லேண்டர் கருவியுடனான தொடர்பை பெற நாசாவும் முயற்சித்து வருகிறது.

    சிக்னல்

    சிக்னல்

    இதற்காக இஸ்ரோவின் ஒப்புதலை பெற்ற நாசா, லேண்டருக்கு ஹலோ என்ற மெசேஜை அனுப்பியுள்ளது. லேண்டரிலிருந்து இந்த மெசேஜுக்கு இன்னும் ஓரிரு நாளில் சிக்னலாக மெசேஜ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பூமிக்கும் சந்திரனுக்கும்

    பூமிக்கும் சந்திரனுக்கும்

    இஸ்ரோவை போல் நாசாவும் லேண்டருனான தொடர்பை பெற ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. விக்ரம் லேண்டரில் நாசாவின் மைக்ரோவேவ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய முடியும். மேலும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள சரியான தூரம் குறித்து கண்டறியப்படும்.

    கண்ணாடிகள்

    கண்ணாடிகள்

    இந்த தூரத்தை கண்டறியும் கணக்குகள் எல்லாம் நிலவில் நாசா எதிர்காலத்தில் நடத்தும் ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும். நிலவில் விக்ரம் லேண்டர் வேகமாக தரையிறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் நாசாவின் கருவியில் உள்ள கண்ணாடிகள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.

    தென்துருவம்

    தென்துருவம்

    ஆர்பிட்டரில் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட 8 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து நிலவின் தென் துருவத்தின் 3டி மேப்பிங் மற்றும் துல்லிய கருவிகள் கிடைக்கும். இந்த படங்கள் வரும் 2024-ஆம் ஆண்டு மனிதனை தென்துருவத்துக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

    சீனா திட்டம்

    சீனா திட்டம்

    தென் துருவத்தை பற்றி மேலும் பல தகவலைகளை அறிந்து கொண்டால் வருங்காலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என நாசா நம்புவதால் இஸ்ரோ திட்டத்தின் மீது ஆர்வமாக உள்ளது. மற்றொரு மிக முக்கியமாக கூறப்படுவது என்னவெனில் நிலவின் தென்துருவத்தில் சீனா ஆய்வு கூடத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.

    நாசாவும் ஆர்வம்

    நாசாவும் ஆர்வம்

    சீனாவுக்கு முன்பு நாம் அமைத்துவிட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. இதனால்தான் லேண்டருடனான தொடர்பை பெற இஸ்ரோவுடன் இணைந்து நாசாவும் ஆர்வம் காட்டி வருகிறது.

    English summary
    Why is Nasa showing interest in India’s Chandrayaan-2 mission as there are so many reasons in that.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X