பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லேண்டருடனான தொடர்பை பெற 14 நாட்களுக்குள் முயற்சி.. அதென்ன 14 நாட்கள் கெடு?

Google Oneindia Tamil News

Recommended Video

    No signal From Vikram Lander

    பெங்களூர்: லேண்டருடனான தொடர்பை பெற 14 நாட்களுக்குள் முயற்சிப்போம் என இஸ்ரோ கூறியது ஏன் என்றும் அதென்ன 14 நாட்கள் கணக்கு என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    நிலவின் தென்துருவத்தில் தண்ணீர், தாதுக்கள், கனிமங்கள் ஆகியவை குறித்து கண்டறிய சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தினர். இந்த விண்கலம் ஆர்பிட்டர், விக்ரம், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டது.

    விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து லேண்டரும், அதில் உள்ள ரோவரும் கடந்த 2-ஆம் தேதி தனியாக பிரிந்தது. இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை 1.54 மணிக்கு சந்திரனில் இருந்து 35 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்த லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க விஞ்ஞானிகள் முயற்சித்தனர்.

    மோடி அரசின் 100 நாள் சாதனை என்ன.. முத்தரசன் அறிக்கை!மோடி அரசின் 100 நாள் சாதனை என்ன.. முத்தரசன் அறிக்கை!

    2 நிமிடங்கள்

    2 நிமிடங்கள்

    ஆனால் நிலவில் தரையிறங்குவதற்கு வெறும் 2 நிமிடங்களுக்கு முன்னர் லேண்டரில் இருந்து கிடைக்க வேண்டிய சிக்னல்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் லேண்டர் வாகனம் தரையிறங்கியதா என தெரியவில்லை. இந்த நிலையில் அந்த லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

    14 நாட்கள் கெடு

    14 நாட்கள் கெடு

    இதனால் லேண்டர், ரோவரில் உள்ள ஏதேனும் ஒரு உறுப்பை இயக்க இன்னும் 14 நாட்களுக்குள் முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தார். அதென்ன 14 நாட்கள் கெடு விதித்துள்ளார் சிவன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

    14 நாட்கள் இரவு

    14 நாட்கள் இரவு

    அதாவது நிலவில் 14 நாட்கள் பகலாகவும், 14 நாட்கள் இரவாகவும் இருக்கும். இதை அமாவாசை, பௌர்ணமி என நாம் பூமியில் சொல்வோம். எனவே லேண்டரை பகல் பொழுதிலேயே கண்டறிந்துவிட இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    மைனஸ் 170 டிகிரி குளிர்

    மைனஸ் 170 டிகிரி குளிர்

    ஒரு வேளை இரவு பொழுது வந்துவிட்டால் அங்கு வெப்பநிலை மைனஸ் 170 டிகிரி வரை இருக்கும். கடுமையான குளிர் காரணமாக லேண்டர் உறைந்துவிடும். எனவே பகல் பொழுதிலேயே தேடி முடிக்க விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

    English summary
    Why ISRO is fixing deadline to make communicate with Lander? Here are the reasons for why Sivan says to stimulate Lander for communication within 14 days?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X