பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் இடமாற்றம் ஏன்?.. வைரலாகும் #BringBackManivannan

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நேர்மையாக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது இடமாற்றத்தால் தன்னார்வலர்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொரோனா முன்களப் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டனர்.

கர்நாடகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தொழிலாளர் நலத் துறையின் முதன்மை செயலாளருமாக இருந்தவர் மணிவண்ணன். இவர் தகவல் துறையின் செயலாளராகவும் இருந்து வந்தார்.

மிகவும் நேர்மையான அதிகாரியான இவர் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி கொரோனா போராளி குழுவை தொடங்கியுள்ளார். அந்த குழு மூலம் இவரது தலைமையின் கீழ் ஏராளமான தன்னார்வலர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள்.

தொழிலாளர்களுக்கு ஊதியம் தராத நிறுவனங்கள், ஆக்ஷன் எடுக்க தயாரான மணிவண்ணன்.. தூக்கியடித்த கர்நாடக அரசுதொழிலாளர்களுக்கு ஊதியம் தராத நிறுவனங்கள், ஆக்ஷன் எடுக்க தயாரான மணிவண்ணன்.. தூக்கியடித்த கர்நாடக அரசு

ஐஏஎஸ் அதிகாரி

ஐஏஎஸ் அதிகாரி

இந்த நிலையில் அவர் திங்கள்கிழமையான நேற்று இரவு பணியிட மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியிட மாற்றத்திற்கான உத்தரவில் எந்தவித காரணமும் குறிப்பிடப்படவில்லை. இவருக்கு பதிலாக மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான மகேஸ்வர் ராவை அரசு பணியமர்த்தியது. வர்த்தம் மற்றும் தொழில் துறையின் முதன்மை செயலாளராக இருந்தவர் மகேஸ்வர் ராவ்.

டிரென்ட்

டிரென்ட்

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் கொரோனா களப்பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் தங்கள் பணிகளை நிறுத்திக் கொண்டனர். மேலும் #BringBackManivannan என்ற ஹேஷ்டேக்கை டிரென்டாக்கி வருகிறார்கள். மணிவண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணமாக அவர் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தியதே என கூறப்படுகிறது.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

லாக்டவுனின் போது பெரும்பாலான நிறுவனங்கள் ஊதியம் வழங்கவில்லை என கடந்த 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்ட புகார்கள் மணிவண்ணனை வந்தடைந்தன. அப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து மாநில அரசு விளக்கம் கேட்டு நிறுவன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் என தெரிவித்திருந்தார். இதுவும் மணிவண்ணன் இடமாற்றத்திற்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இடமாற்றம்

இது நியாயமே இல்லை. கொரோனாவுக்கு எதிராக மாநிலம் போராடி வரும்போது இந்த இடமாற்றம் செய்ததில் எந்த நியாயமும் இல்லை என்கிறார் இந்த வலைஞர்.

கொரோனா களப்பணி

இந்த புகைப்படங்களே மணிவண்ணன் குறித்து பேசும். நேர்மையாழ அதிகாரி மணிவண்ணன் அழைப்பின் பேரில்தான் தன்னார்வலர்கள் வந்து கொரோனா களப்பணியில் ஈடுபடுகிறார்கள் என்கிறார் இந்த வலைஞர்.

எடியூரப்பா

கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்களே மணிவண்ணன் மீண்டும் பழைய துறைக்கே அதாவது தொழிலாளர் நலத் துறைக்கே வர வேண்டும் என்கிறார் இந்த வலைஞர்.

English summary
Why IAS officer transferred to other department? Volunteers trends #BringBackManivannan and #BringBackCaptain hashtags in Social Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X