பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இஸ்ரோ மையத்தில் சட்டென மாணவர் கேட்ட சுவாரசிய கேள்வி.. பிரதமராகலாமே.. சிரித்தபடி பதில் சொன்ன மோடி

Google Oneindia Tamil News

பெங்களூர்: சந்திரயான்-2 லேண்டர் விக்ரம், இன்று அதிகாலை, நிலவில் தரையிறங்குவதாக இருந்தது. இதையடுத்து, இஸ்ரோ மையத்தில் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தந்திருந்த மாணவர்கள் அதை கண்டு ரசிக்க குவிந்திருந்தனர். வினாடி வினாக்கள் நடத்தி அதில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் இவ்வாறு சிறப்பு விருந்தினர்களாக, அழைத்துவரப்பட்டிருந்தனர்.

இதேபோல பிரதமர் மோடியும், இஸ்ரோ தலைமையகம் சென்றிருந்தார். அப்போது, மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

Why Not Prime Minister? Narendra Modi to boy who wanted idea to become president

அங்கிருந்த மாணவன் ஒருவர், நாட்டின் குடியரசுத் தலைவராக ஒருவர் என்ன செய்ய வேண்டும்..? என்று சட்டென மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்தபடியே "ஏன் நீங்கள் பிரதமராகக் கூடாது?" என்று பதில், கேள்வி எழுப்பினார் மோடி. அதற்கு அந்த மாணவர், "நான் இந்தியாவின் ஜனாதிபதி ஆவதே இலக்கு. நான் என்ன கடைப்பிடிக்க வேண்டும்? கூறுங்களேன்" என்று பதிலுக்கு கேட்டார் அந்த மாணவர்.

மீண்டும் சிரித்தபடியே பதிலளித்தார் மோடி, "வாழ்வில் மிகப்பெரிய இலக்கை குறிக்கோளாக கொள்ளுங்கள். அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். சிறிய இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள். ஏமாற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். நீங்கள் தவறவிட்டதை மறந்து விடுங்கள்" என்று டிப்ஸ் கொடுத்தார்.

இதன்பிறகு, பிரதமர் மோடி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்ததோடு, அந்த மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

English summary
A student present at the ISRO Centre here urged Prime Minister Narendra Modi to give him tips to become the President of India, the former jovially asked him why doesn't he aim to become the Prime Minister instead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X