பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூர் மத்திய தொகுதியை பிரகாஷ் ராஜ் செலக்ட் செய்தது ஏன் தெரியுமா.. செம ஐடியா செல்லம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

    பெங்களூர்: நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அந்த தொகுதியை மட்டும் அவர் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு பிறகு அரசியலுக்கு வருவதாக கூறிய மூன்றாவது நட்சத்திரம் பிரகாஷ் ராஜ் ஆவார். இவர்களில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கமல்ஹாசன் கட்சியை தொடங்கி பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

    தேர்தலில் நிற்கும் பிரகாஷ் ராஜுக்கு முழு ஆதரவு.. ஆம் ஆத்மி அதிரடி.. பிரச்சாரம் செய்யவும் முடிவு! தேர்தலில் நிற்கும் பிரகாஷ் ராஜுக்கு முழு ஆதரவு.. ஆம் ஆத்மி அதிரடி.. பிரச்சாரம் செய்யவும் முடிவு!

    பிரகாஷ்ராஜ் அரசியல் கட்சி ஏதும் தொடங்கவில்லை. ஆனால் அவரது நண்பரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் வலதுசாரி அமைப்பினரால் கடந்த 2017-ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    பிரசாரம்

    பிரசாரம்

    இதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரகாஷ்ராஜ், பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    சுயேச்சை

    சுயேச்சை

    இந்நிலையில் கர்நாடக தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்திருந்தார். இதையடுத்து அவர் நேற்றைய தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் பெங்களூர் மத்திய தொகுதியில் (லோக்சபா)
    சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    வெற்றி

    வெற்றி

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 17 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் ஜேடிஎஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

    தேர்வு

    தேர்வு

    இந்நிலையில் பிரகாஷ் ராஜ் போட்டியிடுவதாக அறிவித்துள்ள பெங்களூர் மத்திய தொகுதியில் கடந்த முறை பாஜகவின் பி. சி.மோகன் வெற்றி பெற்றுள்ளார். அத்தனை தொகுதிகள் இருக்கையில் அதென்ன பெங்களூர் மத்திய தொகுதியை பிரகாஷ் ராஜ் தேர்வு செய்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதிகம் பேர்

    அதிகம் பேர்

    பெங்களூர் மத்திய தொகுதியானது காந்தி நகர், சிராஜ்பேட், சர்வஞானநகர், சாந்தி நகர், ராஜாஜி நகர், சிவி ராமன் நகர், சிவாஜி நகர் மற்றும் மகாதேவாபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்குட்பட்டதாகும். இவற்றில் சிவி ராமன் நகர், சிவாஜி நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

    பாராட்டு

    பாராட்டு

    மேற்கண்ட இடங்களில் சிலவற்றில் தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வசித்து வருகின்றனர். எனவே தமிழர்களின் வாக்குகளை குறி வைத்து பிரகாஷ் ராஜ் பெங்களூர் மத்திய தொகுதியில் களம் காணலாம் என தெரிகிறது. இன்னும் சிலரோ சிவி ராமன் நகரில் அவருக்கு சொந்தமாக வீடு உள்ளது என்கின்றனர். எதுவாக இருந்தாலும் பிரகாஷ் ராஜின் முடிவை செம ஐடியா செல்லம் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Why Actor Prakash Raj is going to contest in Bangalore Central constituency?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X