பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடியூரப்பாவுக்கு வேலையை ஈஸியாக்கிய சபாநாயகர்.. 17 பேரை தகுதி நீக்கம் செய்தது ஏன்?.. பரபர பின்னணி!

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக சபாநாயகர் அதிரடி... மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்

    பெங்களூர்: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டால் எடியூரப்பா ஈஸியாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என தெரிந்தே சபாநாயகர் 17 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது.

    கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத ஆட்சி 15 எம்எல்ஏக்கள் ராஜினாமாவாலும் ஒரு சுயேச்சை எம்எல்ஏவினாலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததாலும் கவிழ்ந்தது. இதையடுத்து முதல்வராக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா பதவியேற்றார்.

    இந்த நிலையில் அவர் வரும் 31-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய்வாலா உத்தரவிட்டுள்ளார். எனினும் எடியூரப்பா அரசு நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளது.

    பெரும்பான்மை

    பெரும்பான்மை

    இந்த வாக்கெடுப்பில் எப்படியும் எடியூரப்பா அரசு வெற்றி பெறுவதற்காக வியூகம் வகுத்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதால் சட்டசபையின் பலம் 221-ஆக இருந்தது. இதில் பெரும்பான்மை கிடைக்க 111 அல்லது 112 தேவைப்பட்டது.

    தேவை

    தேவை

    இதில் பாஜக எம்எல்ஏக்கள் 105 பேரும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் என சேர்த்து 106 பேரின் ஆதரவு இருந்தது. இந்த நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 5 அல்லது 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. இன்று சபாநாயகர் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    அதாவது மேலும் 14 பேரை தகுதி நீக்கம் செய்தால் எடியூரப்பா எளிதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும் என தெரிந்தே அவர் அவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    பாஜகவில்

    பாஜகவில்

    இதனால் தகுதி நீக்க எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்கள் ஆட்சியை பிடித்து 14 மாதங்களே ஆகின்றது. இந்த நிலையில் பதவிக்காக இது போல் இந்த 16 பேரும் (17 பேரில் ஒருவர் சுயேச்சை) பாஜக ஆட்சியின் கீழ் பதவி சுகத்தை அனுபவிக்கக் கூடாது என்பதற்காக சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார். எந்த விதத்தில் பாஜக அரசில் இந்த 17 பேரும் இணைந்து பதவிச் சுகத்தை அனுபவிப்பதை தடுக்கவே இத்தகைய முடிவை சபாநாயகர் எடுத்துள்ளார். எதிரியை கூட மன்னித்து விடலாம். ஆனால் துரோகிகளை மன்னிக்கவே கூடாது என்பதே காங்கிரஸ்- மஜதவின் எண்ணமாகும்.

    English summary
    Rebel Cong, JDS MLAs disqualified to prevent them from enjoying power in new BJP dispensation under Yediyurappa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X