பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இ பாஸ் வைத்திருந்தாலும் தமிழக வாகனங்கள் கர்நாடகா எல்லையில் தடுத்து நிறுத்தம்.. பொதுமக்கள் தவிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூரு: இன்று (மே 10 முதல்) நண்பகல் முதல் இ பாஸ் பெற்றிருந்தாலும் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு கர்நாடகா எல்லையில் அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த வாகனங்கள் மீண்டும் தமிழகத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களை பெங்களூரு செல்ல அம்மாநில போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இன்று மதியம் முதல் அனுமதி மறுத்துள்ளனர்.

why Tamil nadu vehicles stopped in karnataka border : Government of Karnataka explain

சென்னையில் இருந்து இபாஸ் பெற்று 2வயது குழந்தைகளுடன் இபாஸ் உடன் பெங்களூருவுக்கு ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர். அவர்களை கர்நாடகா தமிழக எல்லையான அத்திபெல்லி/ஜுஜுவாடி செக்போஸ்டில் தடுத்து நிறுத்தி தமிழகத்திற்கே திருப்பி அனுப்பி உள்ளனர்.

மே 12 முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு மே 12 முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு

கர்நாடகா அரசிடம் இ பாஸ் பெற்றிருந்தாலும் கூட அவர்களை போலீசார் கர்நாடகாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் தமிழகத்திற்கே திருப்பி அனுப்பி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த குழப்பம் காரணமாக இன்று மாலை முதல் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடகா அரசு திவ்யா மருணித்யா என்பவருக்கு டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. பெங்களூரு ஊரக மாவட்ட சூப்பரண்டு போலீசார் அளித்த தகவலின் படி, கர்நாடகாவிற்குள் வர வேண்டும் என்றால் தனிமைப்படுத்துதலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி தனிமைப்படுத்துதலை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே கர்நாடகா எல்லையில் அனுமதி அளிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திவ்யா மருணித்யா என்பவர் கர்நாடகா அரசை டேக் செய்து தங்களுக்கு தனிமைப்படுத்துதல் குறித்து எந்த விளக்கத்தை அளிக்காமல் வாகனத்தை போலீசார் தாக்கியதாக புகார் அளித்தார், அது தொடர்பாக விசாரணை நடத்த பெங்களூரு புறநகர் போலீசின் கவனத்திற்கு அறிவுறுத்தப்படும் என்று கர்நாடகா அரசு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

English summary
why Tamil nadu vehicles stopped in karnataka border : As per the information received from SP, Bengaluru Rural, If the commuters are accepting the institutional quarantine, they shall be allowed to enter the Karnataka border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X