நீதிமன்றத்தில் தவறு செய்தால் தலையை துண்டித்து கொள்வேன்.. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பரபர பேச்சு
பெங்களூர்: நீதிமன்ற நடவடிக்கைகளின்போது நான் தவறு செய்தால் கர்நாடக சட்டசபை-உயர்நீதிமன்றம் முன்பு தலையை துண்டித்து கொள்கிறேன் என கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வீரப்பா ஆவேசமாக பேசினார்.
கர்நாடகம் தலைநகர் பெங்களூரில் அம்மாநில உயர்நீதிமன்றம் உள்ளது. தலைமை நீதிபதியாக ரிது ராஜ் அவஸ்தி இருந்தார்.
கர்நாடகத்தில் ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனு இவர் தலைமையில் தான் விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுபோல் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து ரிதுராஜ் அவஸ்தி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
நெருங்கும் கர்நாடக தேர்தல்.. பரிதாப நிலையில் பாஜக! சீக்ரெட் ரிப்போர்டால் தாமரை தலைமை அதிர்ச்சி

உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு
இந்நிலையில் ரிது ராஜ் அவஸ்தி ஓய்வையொட்டி பெங்களூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபச்சார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தார். இந்த விழாவில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி வீரப்பா பேசினார்.

தலையை துண்டித்து கொள்கிறேன்
அப்போது அவர் கூறுகையில், ‛‛நீதிமன்ற நடவடிக்கைகளின்போது அவதூறாகவும், ஆதாரமற்ற வகையிலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயல்படுவதாக வக்கீல்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகின்றன. நீதிபதியாக நான் தவறு செய்தால் விதானசவுதா(கர்நாடக சட்டசபை) கர்நாடக உயர்நீதிமன்றம் முன்பு நின்று நானே என் தலையை துண்டித்து கொள்கிறேன்.

பொறுத்து கொள்ள முடியாது
நீதிபதிகள் மீது வழக்கறிஞர்கள் ஆதாரமாற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது வழக்கறிஞர்கள் சங்கம் நீதித்துறையை காப்பாற்ற முன்வர வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற நடத்தைகளை ஓரளவு பொறுத்து கொள்ள முடியும். ஆனால் வரம்பு மீறும்போது சுதர்சன சக்ராவை(விஷ்ணுவின் ஆயுதம்) பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை'' என்றார்.

இதைவிட பெரிய பிரச்சனை ஏதுமில்லை
இதற்கு பெங்களூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் விவேக் சுப்பா ரெட்டி பேசும்போது, ‛‛ஒரு நீதிபதியின் நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதை விட பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. குறிப்பாக ஒருமைப்பாட்டை காப்பது கடினமாகிவிட்ட சூழலில் இது மிகப்பெரிய பிரச்சனையாகும். வழக்கறிஞர்களின் தவறான அறிக்கைகள் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை பாதிக்கும்.

கட்டுப்படுத்தப்பட வேண்டும்
நீதிபதியின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிகவும் அரிதாக நடக்கிறது. இது சுதர்சன சக்ரா மூலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை '' என்றார்.