பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடியூரப்பாவை போல் குமாரசாமியும் இன்றே "அதை" செய்வாரா?

Google Oneindia Tamil News

பெங்களூர்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் எடியூரப்பாவை போல் குமாரசாமியும் ஒரு நாள் முன்னதாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட இந்த சட்டசபைக்கு பாஜக சார்பில் 104 பேரும், காங்கிரஸ் சார்பில் 80 பேரும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் 37 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது! மாஸ் பிளான்நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது! மாஸ் பிளான்

ஆட்சி அமைக்க கோரிக்கை

ஆட்சி அமைக்க கோரிக்கை

இதில் பாஜக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற போதிலும் பெரும்பான்மைக்கு 112 அல்லது 113 இடங்கள் தேவைப்பட்டது. எனினும் குதிரை பேரம் நடத்தி எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என எண்ணியதால் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்த நிலையில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அவர் 6 நாட்களுக்கு மட்டுமே அப்பதவியில் நீடித்தார். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்ட ஒரு நாள் முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பை கோராமலேயே அவர் பதவி விலகினார்.

15 எம்எல்ஏக்கள்

15 எம்எல்ஏக்கள்

இதையடுத்து முதல்வராக எச் டி குமாரசாமி காங்கிரஸ் துணையுடன் பதவியேற்றார். அவரும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி அதில் வெற்றி பெற்றே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இந்த நிலையில் குமாரசாமி பொறுப்பேற்று 15 மாதங்களே ஆகும் நிலையில் அவரது ஆட்சிக்கு எதிராக 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்த நிலையில் நாளை கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளது. எடியூரப்பா எப்படி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்னர் பதவி விலகினாரோ அது போல் குமாரசாமியும் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Will Kumaraswamy resign before the trust vote like Yeddyurappa did after swearing in as CM for one day?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X