பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் மே 10 முதல் 24ம் தேதி வரை முழு லாக்வுடன்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கொரோனா தொற்று பரவல் கர்நாடகாவில் மிகவும் உச்சமடைந்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடாகவில் இன்று ஒரே நாளில் 48,781 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 592 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். 28623 பேர் கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் குணமாகி உள்ளனர்.

With full lockdown from May 10 to 24 in Karnataka

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் உச்சம் பெற்று வருவதால் முழு லாக்டவுன் அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.

அனைத்து ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், பார்கள் இயங்கக்கூடாது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு பலனளிக்காததால் தற்காலிகமாக முழு டக்டவன் அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துளளார்.

English summary
Chief Minister B S Yediyurappa announces complete lockdown from May 10 to May 24 in Karnataka in view of alarming rise in COVID cases and related fatalitie. Karnataka reports 48,781 new COVID-19 cases, 592 deaths and 28,623 discharges in the last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X