பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட ஆண்டவா.. இப்படி கூட நடக்குமா.. எங்க போய் முட்டிக்கிறதுன்னே தெரியலையே.. சங்கடத்தில் சங்கீதா!

Google Oneindia Tamil News

பெங்களூரு: அதாவது பெண் - மாப்பிள்ளைக்கு ஒருத்தருக்கொருத்தர் பிடிக்கவில்லை என்றால் திருமணம் நின்றுவிடும்.. அல்லது வரதட்சணை, காதல் விவகாரம் போன்ற சமாச்சாரங்களால் நடக்க உள்ள கல்யாணம் நின்றுவிடும்.. ஆனால் கர்நாடகாவில் ஒரு திருமணம் திடீரென நின்றுள்ளது. அந்த காரணத்தை கேட்டால் நாம எங்கே போய் முட்டிக் கொள்வது என்றே தெரியவில்லை.

கர்நாடகாவின் ஹசன் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரகு குமார்... சங்கீதா என்ற பெண்ணை காதலித்தார்.. அதி தீவிரமான காதல்.. விஷயம் வீட்டுக்கு தெரிந்தது.

இவர்களின் காதலின் ஆழத்தை பார்த்து இரு வீட்டினரும் பிரம்மித்து போய்விட்டனர்.. பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று கல்யாணத்துக்கு சம்மதமும் தெரிவித்தனர். கல்யாண வேலை தடபுடலாக நடந்தது.

வெரி ஸ்மார்ட்.. சபாஷ் சுஷ்மா.. வேத, மந்திரங்களை ஓதி.. கல்யாணத்தை நடத்துவது யார்ன்னு பார்த்தீங்களா?வெரி ஸ்மார்ட்.. சபாஷ் சுஷ்மா.. வேத, மந்திரங்களை ஓதி.. கல்யாணத்தை நடத்துவது யார்ன்னு பார்த்தீங்களா?

பத்திரிகை

பத்திரிகை

கடந்த பிப்ரவரி 6-ம்தேதிதான் கல்யாணம்... இரு வீட்டு தரப்பிலும் ஊரெல்லாம் பத்திரிகை தரப்பட்டு வந்தன.. இந்நிலையில், திருமணத்திற்காக பெண் வீட்டார் சார்பில் சங்கீதாவுக்கு புடவை எடுத்து தந்தனர்.. அது முகூர்த்த புடவை.. ஆனால் மணப்பெண்ணிற்கு வாங்கிய புடவை மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடிக்கவில்லை.. புடவையின் தரம் குறைவாக இருக்கு.. வாழக்கையில் ஒருமுறை வரும் நல்ல காரியம்.. அதனால் கொஞ்சம் காஸ்ட்லியான புடவையாக இருந்தால் நல்லா இருக்கும் என்றனர் மாப்பிள்ளை வீட்டினர்.

காஸ்ட்லி புடவை

காஸ்ட்லி புடவை

ஆனால் சங்கீதாவோ, "அந்த புடவையை கட்ட போறது நான்.. எனக்கு சிம்பிளா இருந்தால்தான் பிடிக்கும்.. அவ்ளோ செலவு பண்ணி, அதை வேஸ்ட்டாதான் பூட்டி வைக்கணும்.. அதனால எனக்கு இந்த புடவை போதும் என்றார். ஆனால் புடவையை மாற்றும்படி மாப்பிள்ளை வீட்டினர் கறாராக இருக்க.. அதற்கு மேல் கறார் காட்டினார் சங்கீதா.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

விடிந்தால் கல்யாணம்.. அதுவரை 2 வீட்டு தரப்பினரும் இந்த கல்யாண புடவை பேச்சிலேயே வீம்பாக இருந்தனர்.. கல்யாண மண்டபத்துக்கும் வந்தும் இந்த சண்டை தொடர்ந்தது.. சுற்றம் - சூழ - உறவினர்கள், நண்பர்கள் மண்டபத்தில் நிரம்பி வழிய ஆரம்பித்தனர். கடைசி நேரத்தில் திடீரென இந்த கல்யாணம் வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டினர் முடிவு செய்துவிட்டனர்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

உடனடியாக கல்யாண மண்டபத்திலிருந்து மொத்த பேரும் கிளம்பி வெளியேறினர்.. இதனால் பெண் வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர்.. திருமணமும் நின்றுவிட்டது.. சங்கீதா இப்போது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மாப்பிள்ளை மீது மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளதாம். வெறும் புடவையை காரணம் காட்டி கல்யாண மேடை வரை வந்து நின்று போன இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
woman marriage has stopped in karnataka due to brides saree is not nice
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X