பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பக்கம் பிரசவ வலி.. மறுபக்கம் தவிப்பு.. நடுவானில் பரபரப்பு.. கடைசியில் "குவா குவா".. செம ஹேப்பி!

பெங்களூர் பிளைட்டில் நடுவானில் சுக பிரசவம் நடந்து முடிந்துள்ளது

Google Oneindia Tamil News

பெங்களூரு: பொதுவாக ஓடும் பஸ்ஸில், ரயிலில், ஆம்புலன்சில் கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துவிடும்.. ஆனால், நடுவானில் குழந்தை பிறப்பது என்பது அபூர்வம்.. அப்படி ஒரு சம்பவம்தான் பெங்களூரில் நடந்துள்ளது. நடுவானில் ஃபிளைட் பறந்து கொண்டிருக்கிறது.. திடீரென கர்ப்பிணிக்கு பிரசவ வலி வந்துவிட்டது.. கர்ப்பிணி ஒரு பக்கம் வலியால் துடிக்க, பயணிகள் மறுபக்கம் பதறி போய் தவிக்க.. அப்போதுதான் டாக்டர் ஷைலஜாவின் பேருதவி கிடைக்க நேரிடுகிறது!

பெங்களூருவை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி அவர்.. சில நாட்களுக்கு முன்பு, சொந்த வேலையாக டெல்லி சென்று இருந்தார்... நேற்று முன்தினம் சாயங்காலம் அந்த பெண், இண்டிகோவின் 6E 122 ஃபிளைட்டில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டு இருந்தார்.

ஃபிளைட்டும் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.. அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி வந்துவிட்டது.. வலி தாங்க முடியாமல் கதறி துடித்தார்.. உடனிருந்த பயணிகளுக்கும் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர்.. அப்போதுதான், அதே ஃபிளைட்டில் ஒரு டாக்டர் பயணம் செய்தது தெரியவந்தது.. அவர், பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர்.. பெயர் சைலஜா...!!

பேராபத்து.. பேராபத்து.. "இந்த" விஷயத்தில் பாஜகவை விட ஸ்டாலின் எவ்வளவோ பரவாயில்லை.. ஆனால் அதிமுக சுதாரிக்கணும்!

 வலி

வலி

கர்ப்பிணி பெண் வலியால் துடித்து கொண்டிருப்பதை பற்றி அவரிடம் விமான ஊழியர்கள் தகவல் சொன்னார்கள்... இதை கேட்டதும், சைலஜா உடனடியாக பிரசவம் பார்க்க வந்தார்.. அதே ஃபிளைட்டுக்குள் தனியாக ஒரு சின்ன ரூம் போல, விமான பணிப்பெண்கள் அமைத்து தந்தனர்.. அந்த இடத்தில்தான் பிரசவம் நடந்தது.

 மகப்பேறு மருத்துவர்

மகப்பேறு மருத்துவர்

டாக்டர் ஷைலஜா பிரசவம் பார்க்க, பணிப்பெண்கள் உதவியாக உதவியாக இருக்க.. அடுத்த சில நிமிடங்களிலேயே ஆண் குழந்தை பிறந்தது.. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டபிறகே பயணிகள் அனைவரும் நிம்மதியானார்கள்.. மொத்த பிரசவமும் நடுவானிலேயே நடந்து முடிந்தது.. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள ஏர்போர்ட் அதிகாரிகளை, தொடர்பு கொண்டு பிரசவம் நடந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

 ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

இதையடுத்து பெங்களூர் ஏர்போர்ட்டில் ஃபிளைட் தரையிறங்கியதுமே, அங்கு தயாராக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.. அதில், தாயையும் - சேயையும் பத்திரமாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. இப்போது, அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை தந்து வருகிறார்கள்.. இருவருமே நலமுடன் இருக்கிறார்களாம்.. இவ்வளவு பெரிய உதவியை செய்த டாக்டர் ஷைலஜாவுக்கும் விமான பணி பெண்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

 அறிக்கை

அறிக்கை

இந்நிலையில், இதுகுறித்து, இண்டிகோ நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில், "6E 122 டெல்லி - பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. மாலை 7:40 மணிக்கு விமானம் தரையிறங்கியது.. எல்லா செயல்பாடுகளும் வெகு இயல்பானவை.

 பயணம்

பயணம்

தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர்... பெண்ணுக்கு முதலுதவி அளித்த விமான ஊழியர்களை வாழ்த்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, இண்டிகோ விமானத்தில் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும், இண்டிகோ ஃபிளைட்டில் பயணம் செய்யும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாம்!

English summary
Woman passenger delivers a baby in Indigo flight midway
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X