பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் வாழ்க.. ஓவைசியின் மேடையில் கோஷமிட்ட பெண் மீது தேசதுரோக வழக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் வாழ்க.. ஓவைசி முன் மேடையில் கோஷம் போட்ட பெண்! மைக்கை புடுங்கி தடுக்க முயன்ற ஓவைசி! - வீடியோ

    பெங்களூரு: பெங்களூருவில் ஒவைசி பங்கேற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று ஒரு பெண் கோஷமிட்டுள்ளார். அந்த பெண் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அங்கு என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் என்ஆர்சிக்கு எதிராகவும் நேற்று பெங்களூருவில் போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்தில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சிச் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டார்.

    தடுத்த ஓவைசி

    தடுத்த ஓவைசி

    பேரணியில் ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்த போது ஓவைசியும் பேச மேடைக்கு வந்தார். திடீரென மேடை ஏறிய இளம் பெண் ஒருவர், மைக்கை பிடித்து பாகிஸ்தான் வாழ்க, என்று கோஷம் போட்டார். உடனடியாக அதை தடுக்க முயன்ற ஓவைசி அந்த பெண்ணிடம் இருந்து மைக்கை பறிக்க முயற்சித்தார்,

    விடாமல் கோஷம்

    விடாமல் கோஷம்

    ஆனால் அந்த பெண் மைக்கை கொடுக்க மறுத்து மீண்டும் பாகிஸ்தான் வாழ்க் என்று கோஷம் போட்டார். இதனால் மேடையில் இருந்த அனைவரும் அவரிடம் இருந்து மைக்கை பறித்து வெளியேற்ற முயன்றனர். அப்போது அந்த பெண் கடைசியாக இந்தியா வாழ்க என்று கோஷம் போட்டார். அதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்கை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

    பெண் கைது

    பெண் கைது

    அந்த பெண்ணை தேசதுரோக வழக்கில் கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் அதுல்யா என்பதும் அவர் சிஏஏ எதிர்ப்பாளர் என்பதும் தெரியவந்தது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது அந்த பெண் ஜாமின் கோரினார்.அதை நிராகரித்த நீதிபதி அவரை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதேநேரம் ஓவைசி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

    இந்தியா எங்கள் நாடு

    இந்தியா எங்கள் நாடு


    ஓவைசியின் மேடையில் இளம் பெண் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியது பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே அந்த பெண்ணை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற பின்னர் பேசிய ஓவைசி, அந்த பெண்ணுக்கும், தமது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். மேலும் நிகழ்ச்சியின் அழைப்பாளர்கள் அந்த பெண்ணை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கக்கூடாது என்றும், இது எனக்கு தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன் என்றும் அவர் கூறினார். நாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு போதும் பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டோம் என்றும் எங்கள் முயற்சி எல்லாம் இந்தியாவை காப்பாற்றுவது தான் என்றும் ஓவைசி மேடையில் தெரிவித்தார்.

    பாகிஸ்தானுக்கு போங்க

    இந்த சம்பவத்திற்காக கர்நாடகா பாஜக, ஒவைசியை கடுமையாக விம்ர்சித்துள்ளது. "சிஏஏ எதிர்ப்பு ஆர்வலர் அமுல்யா லியோனா பெங்களூருவில் AIMIM தலைவர் ஓவைசி முன்னிலையில் பாகிஸ்தான் வாழ்க் என கத்துகிறார். உண்மை என்னவென்றால், சிஏஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான தேசிய எதிர்ப்புப் படைகளுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும். பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் இப்போதே அங்கு செல்ல வேண்டும்,"என்று பாஜக விமர்சித்துள்ளது.

    English summary
    The full clip of the incident where a woman named Amulya at an anti-CAA-NRC rally in Bengaluru raised slogan of 'Pakistan zindabad'. AIMIM Chief Asaddudin Owaisi present at rally stopped the woman from raising the slogan; He has condemned the incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X