பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரில் ஒரு "ஷாகீன்பாக்".. பிலால் மசூதியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து களமிறங்கிய பெண்கள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பிலால் மசூதியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தின் மையமாக டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் களம் உள்ளது.

இங்கு முற்றிலும் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. மத்திய அரசுக்கு பொளேர் பதிலடி தந்த அதிமுக அரசு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. மத்திய அரசுக்கு பொளேர் பதிலடி தந்த அதிமுக அரசு

தகுதி

தகுதி

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்கள் என அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த 3 நாடுகளில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சி, புத்த மதத்தினர், சீக்கிய மதம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்தவர்கள் மட்டும் தகுதியுடையவர் என மத்திய அரசு வரையறை நிர்ணயித்துள்ளது.

மன தைரியம்

மன தைரியம்

இதில் முஸ்லீம்கள், இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடைபெறுகிறது. அது போல் ஜாமியா பல்கலைக்கழகத்திலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஷாகீன் பாக் போராட்டம் கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கடுங்குளிர், காற்றுமாசு, கடும் வெயில் என எதை பற்றியும் கவலைப்படாமல் பெண்கள் தங்கள் மன தைரியத்துடன் போராடி வருகின்றனர்.

போராட்டக் களம்

போராட்டக் களம்

கடந்த இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னர் ஷாகீன்பாக் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். எனினும் உள்ளுக்குள் அச்சம் இருந்தாலும் அந்த இடத்தை விட்டு நகராமல் பெண்கள் போராடினர். அது போன்ற வலிமையான போராட்டக் களமாக பெங்களூரிலும் ஒன்று அமைந்துள்ளது.

போராட்டம்

போராட்டம்

ஆம், பெங்களூரில் உள்ள பிலால் மசூதியில் பிலால் பாக் என பெயர் கொண்ட பேனரை வைத்துள்ளனர். அங்கு திரண்ட பெண்கள், குழந்தைகள் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நீக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை பார்க்கும் போது ஷாகீன் பாக்கை கண் முன் நிறுத்துகிறது.

English summary
Women protest against Citizenship Amendment Act, NRC, NPR near Bilal Masjid in Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X