பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொஞ்சம் பொறுங்கள்.. எடியூரப்பாவை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த அமித் ஷா.. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தும் கூட எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க விடாமல் பாஜக தேசிய தலைமை காலம் தாழ்த்தி வருகிறது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தும் கூட எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க விடாமல் பாஜக தேசிய தலைமை காலம் தாழ்த்தி வருகிறது. எடியூரப்பா தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ஒரு வழியாக 14 மாதங்களுக்கு பின் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. நேற்று கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழ்ந்துள்ளது. இதனால் பெரும்பான்மை இல்லாமல் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

இதுவரை இல்லை

இதுவரை இல்லை

ஆனால் கர்நாடக ஆட்சி கவிழ்ந்து 24 மணி நேரம் முடிய போகிற நிலையிலும் கூட பாஜக தரப்பில் இருந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை. எடியூரப்பா முதல்வர் பதவிக்கு உரிமை கோருவார் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் மட்டுமே வந்தது. மாறாக அதிகாரப்பூர்வமாக பாஜக தரப்பில் இருந்து எந்த விதமான செய்தியும் வரவில்லை.

செல்லவில்லை

செல்லவில்லை

அதேபோல் இன்று மதியம் எடியூரப்பா அவசரமாக அமித் ஷாவை பார்க்க டெல்லி போவதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் டெல்லி செல்லும் பயணம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. சில முக்கிய பாஜக உறுப்பினர்கள் மட்டும் இன்று டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்திக்க உள்ளனர்.

இல்லை

இல்லை

அதேபோல்தான் இன்று நடப்பதாக இருந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆம் இன்று மதியம் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று அதில் எடியூரப்பாவை முதல்வராக ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால் அதை பாஜக செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இன்று மீட்டிங் நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். எடியூரப்பா ஆதரவாளர்களை இந்த செயல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஏன் இப்படி எல்லாமும்

ஏன் இப்படி எல்லாமும்

பாஜக இனி கர்நாடக விஷயத்தில் கொஞ்சம் பொறுமை காக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான பல விஷயங்களை மனதில் வைத்து அமித் ஷா நேரம் தாழ்த்தி வருகிறார். பெரும்பாலும் எடியூரப்பா வெயிட்டிங் லிஸ்டில் இருப்பார், அவர் இன்று முதல்வராக பதவி ஏற்க மாட்டார். பதவி ஏற்பு கொஞ்சம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

English summary
Yeddy waiting for a reply from BJP national chief on claiming the right to governance in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X