பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாய்ப்பளித்த அமித்ஷாவுக்கு.. நச்சுன்னு வெற்றியை பெற்று கொடுத்து.. நன்றிக் கடன் செலுத்திய எடியூரப்பா

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் 12 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக !

    பெங்களூர்: 76 வயதானாலும் பரவாயில்லை என எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி கொடுத்த அமித்ஷாவுக்கு கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைத்ததன் மூலம் கட்சியிலும் ஆட்சியிலும் தனது இருப்பை எடியூரப்பா தக்க வைத்துக் கொண்டார் என்றே கூறலாம்.

    70 வயதுக்கு மேல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்பதில் பாஜக குறியாக உள்ளது. அவ்வாறு 70 வயதை கடந்த முக்கிய தலைவர்களுக்கு ஆளுநர் பதவியை கொடுத்து அழகு பார்த்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் 76 வயதான எடியூரப்பாவுக்கு அக்கட்சி சட்டசபை இடைத்தேர்தலில் வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது பாஜக தலைமை. இப்படித்தான் கர்நாடகத்தில் 2018-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

    குடியுரிமை சட்ட திருத்தம்.. நாளை ராஜ்யசபாவில் தாக்கல்.. அமித் ஷா பிளான்.. சட்டமாக வாய்ப்புள்ளதா?குடியுரிமை சட்ட திருத்தம்.. நாளை ராஜ்யசபாவில் தாக்கல்.. அமித் ஷா பிளான்.. சட்டமாக வாய்ப்புள்ளதா?

    விருப்பமில்லை

    விருப்பமில்லை

    70 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை முதல்வர் வேட்பாளர் பதவிக்கு நிறுத்துவதில் அமித்ஷாவுக்கு விருப்பமே இல்லை என சொல்லப்பட்டது. எனினும் கர்நாடக மாநில பாஜகவில் எடியூரப்பாவை தவிர சொல்லிக்கொள்ளும்படியான தலைவர்கள் யாரும் இல்லாததால் இந்த முடிவை அமித்ஷா எடுத்துள்ளார்.

    பாஜக ஆட்சி

    பாஜக ஆட்சி

    அதிலும் 2018-இல் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிப்பதற்குள் அப்பதவியிலிருந்து எடியூரப்பா விலகியதில் அமித்ஷாவுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. இதையடுத்து ஏதோ தகிடுதத்தங்கள் செய்து குமாரசாமி ஆட்சியை கவிழ்த்துவிட்டு மீண்டும் பாஜக ஆட்சியில் அமர வைத்ததால் அமித்ஷா சற்று சாந்தமாகினார்.

    ஆலோசனை

    ஆலோசனை

    இந்த நிலையில் கர்நாடக இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா ஆட்சி தப்பும் என கூறப்பட்டது. இதனால் அமித்ஷாவுக்கு டென்ஷன் தலைக்கேறியது. மேலும் காங்கிரஸ் கட்சியினரின் பிரசாரங்களை பார்த்துவிட்டு எடியூரப்பாவுக்கு அமித்ஷா கட் அண்ட் ரைட்டாக சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

    பிரசாரம்

    பிரசாரம்

    அதில் மகாராஷ்டிராவில் விட்டதை போல் கர்நாடகத்தை கை நழுவ விடக் கூடாது என்பதை அமித்ஷா கண்டிப்பாக சொல்லிவிட்டாராம். மேலும் பிரசார யுத்திகளில் எதிர்க்கட்சியினரை தாக்கும் கருத்துகளை விட தொகுதி குறித்த பிரசாரத்தை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியிருந்ததாக சொல்லப்படுகிறது.

    இருப்பு

    இருப்பு

    இந்த அறிவுரைகளின்படி எடியூரப்பாவே களத்தில் இறங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தொகுதி வளர்ச்சியை பிரதான யுத்தியாக கையாண்டார். விளைவு நல்ல அறுவடையை பெற்றார். இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் எடியூரப்பா தனது ஆட்சியை மட்டும் தக்க வைத்து கொள்ளவில்லை. கட்சியில் தன் இருப்பையும் நிலை நிறுத்திக் கொண்டார் என்றே சொல்லலாம்.

    English summary
    CM B.S Yeddyurappa made BJP Chief happy by winning in Karnataka byelection 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X