பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர் ஓவருக்கு எடியூரப்பா பிராக்டீஸ்.. 'டை' ஆச்சுன்னா ஐசிசி ரூல் அப்ளே பண்ணுவோம்.. செம்ம ஜாலி

Google Oneindia Tamil News

பெங்களூரு: அதிருப்பதி எம்எல்ஏ விவகாரத்தில் மொத்த கர்நாடகாவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பரபரப்பில் இருக்கும் போது, பெங்களூருவில் ஓட்டலில் சக எம்எல்ஏக்களுடன் எடியூரப்பாக ஜாலியாக கிரிககெட் விளையாடினார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பதவி விலகுவதாக ராஜினாமா கடித்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர். இந்த ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனிடையே நாளை நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்த உச்சநீதின்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Yeddyurappa Plays Cricket With Party mlas At Bengaluru Hotel

இந்த பரபரப்பான சூழலில் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா ஏலகாங்காவில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தற்போது மொத்த கர்நாடகாவும் குமாரசாமி ஆட்சி தொடருமா அல்லது எடியூரப்பா ஆட்சி பிறக்குமா என்ற ரணகளத்தில் உள்ளது.

இந்த சூழலில கர்நாடகா பாஜக அணி சில புகைப்படங்களை மீடியாக்களில் வெளியிட்டுள்ளது.அந்த புகைப்படத்தில் எடியூரப்பா பேட்டிங் செய்கிறார். அவருடன் எம்எல்ஏக்கள் ரேணுகாசார்யா மற்றும எஸ்ஆர் விஸ்வநாத் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் விளையாடுகிறார்கள்.

இதைபார்த்து கருத்து தெரிவித்துள்ள டுவிட்டர்வாசிகள். சூப்பர் ஓவர்களை எதிர்கொண்டு பந்துகளை விளாசி தள்ளுகிறார் எடியூரப்பா.. அடுத்து விக்கெட் யாருப்பா.. என கேள்வி கேட்கிறார்கள். இன்னும் சிலர் சூப்பர் ஓவருக்கு எடியூரப்பா பிராக்டீஸ் செய்து வருவதாகவும், குமாரசாமியுடன் நாளை நடக்கும் ஆட்டத்தில் 'டை' ஆனால் ஐசிசி ரூலை அப்ளே செஞ்சுடுவோம் என கேலியாக கூறியுள்ளார். அதன்படி யாரு அதிக விக்கெட்டை (எம்எல்ஏக்கள் ராஜினாமா) அவுட் ஆக்குனாங்களே அவங்க தான் வின்னிங்.. என கிண்டலாக தெரிவித்துள்ளார்கள்.

English summary
Karnataka state BJP President BS Yeddyurappa seen in a relaxed mood playing Cricket With Party mlas At Bengaluru Hotel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X