• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மோசடி வழக்கு விசாரணையிலிருந்து ரோஷன் பெய்க்கை தப்பிக்க வைக்க நினைக்கும் பாஜக.. குமாரசாமி புகார்

|
  Karnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை?- வீடியோ

  பெங்களூரு: கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐஎம்ஏ மோசடி வழக்கில் பெங்களூரு சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க் எஸ்ஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட போது, எடியூரப்பாவின் உதவியாளர் ஒருவர் தப்பிச் சென்றதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

  கடந்த 15 நாட்களுக்கு மேலாக உச்சகட்ட பரபரப்பில் சுழன்று கொண்டிருக்கும் கர்நாடக அரசியல் களத்தில், பாஜக மீது மாநில முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மாநிலத்தை உலுக்கி வரும் ஐஎம்ஏ மோசடி வழக்கில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.

  Yeddyurappa’s PA who fled the airport after seeing the police .. Kumaraswamy information

  மேலும் அவரை தப்பிக்க வைக்க எடியூரப்பா தலைமையிலான பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. ரோஷனை பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் எஸ்ஐடி போலீசார் கைது செய்த போது, அவருடன் இருந்த எடியூரப்பாவின் உதவியாளரான சந்தோஷ் என்பவர் போலீஸாரை கண்டதும் தப்பியோடி விட்டதாகவும் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  சாம்பார் சாதம் சாப்பிட்டதால் இறந்ததா புலி.. ஊட்டி அருகே பரபரப்பு.. ஆனால் விஷயம் வேறயாம்!

  தற்போது காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பட்டியலில் உள்ள ரோஷன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறதுபெங்களூரு சிவாஜி நகரில் நடந்த ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய மன்சூர்கான், எம்எல்ஏ ரோஷன் பெய்க்குக்கு ரூ.400 கோடி வரை பணம் லஞ்சமாக கொடுத்திருப்பதாக ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

  இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பை செல்வதற்காக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் காத்திருந்த ரோஷன் பெய்க்கை ஐஎம்ஏ மோசடி வழக்கை விசாரிக்கும் சிறப்பு போலீஸ் பிரிவினரான எஸ்ஐடி கைது செய்து விசாரித்தது சிறிது நேர விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

  கர்நாடக அரசியல் களத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தம்மை விமான நிலையத்தில் வைத்து கைது செய்த நடவடிக்கைக்கு எதிராக ரோஷன் பெய்க் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி விமான நிலையத்தில் காவலத்துறையினர் ரோஷன் பெய்க்கை கைது செய்த போது, அங்கிருந்த எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷ் ஓட்டம் பிடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

  ஒரு மோசடி வழக்கில் விசாரணையை எதிர்கொள்ளும் போது, முன்னாள் அமைச்சர் தப்பி ஓடுவதற்கு, மாநில பாஜக தலைவர் உதவி செய்துள்ளதாகவும் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Kumaraswamy alleges that Yeddyurappa's aide escaped from Bangalore Sivaji Nagar constituency when Congress MLA Roshan Paik was arrested by the SIT police in a riotous IMA scam in Karnataka.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more