பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித்ஜி அமித் ஜி.. சும்மா பாறை மாதிரி நின்னாங்கஜி.. எடியூரப்பாவுக்கு எம்புட்டு சந்தோஷம் பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது கர்நாடக அரசு

    பெங்களூர்: நமது கட்சியை சேர்ந்த 105 எம்எல்ஏக்களும் பாறை மாதிரி நம்முடன் நின்றார்கள் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெருமிதம் பொங்க தெரிவித்தார்.

    கர்நாடக அரசியலில் ஒரு பிரளயமே நடந்து விட்டது என சொல்லலாம். அந்தளவுக்கு அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை கடந்த சில நாட்களாக நிலவி வந்தது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்றைய தினம் நடந்தது. இதில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    மனப்பூர்வ நன்றி

    மனப்பூர்வ நன்றி

    இதை பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறுகையில் உங்கள் ஆதரவுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    105 எம்எல்ஏக்கள்

    கர்நாடகத்தில் எச்டி குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நாம் தோற்கடித்துவிட்டோம் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நம் கட்சியைச் சேர்ந்த 105 எம்எல்ஏக்களும் சும்மா பாறை போல் இருந்தனர்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    பல்வேறு அரசியல் காரணங்களால் நமக்கு கடந்த சில நாட்களாக சோதனை காலமாக இருந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை தோற்கடித்துவிட்டோம்.

    நிம்மதி

    நிம்மதி

    இத்தனை நாட்களாக இந்த கூட்டணி அரசின் தவறான நிர்வாக திறமையால் பாதிக்கப்பட்ட பாஜக உறுப்பினர்கள், மாநில மக்கள் தற்போதுதான் நிம்மதி அடைந்துள்ளனர் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    After JDS Government in Karnataka topples yesterday, Yeddyurappa says Amitshah that all our 105 members stood like rock.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X