பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜகவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு முழுவதும் சாலையில் படுத்துறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் கடந்த நடைபெற்ற தேர்தலில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால் எடியூரப்பா அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.

ஆனால் குறைந்த இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சியும் மஜதவும் கூட்டணி சேர்ந்ததால் கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு! பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

பாஜக போராட்டம்

பாஜக போராட்டம்

இதையடுத்து அங்கு ஆட்சியில் உள்ள மஜத - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியின் திட்டங்களுக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

நிலம் விற்க எதிர்ப்பு

நிலம் விற்க எதிர்ப்பு

கர்நாடக மாநில அரசு சந்தூர் என்ற இடத்தில் 3 ஆயிரத்து 600 ஏக்கர் நிலத்தை ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டது. இதில் முறைகேடு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூருவில் போராட்டம்

பெங்களூருவில் போராட்டம்

இதுதொடர்பாக பெங்களூருவில் இரவு - பகல் என போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பெங்களூருவில் பாஜகவினர் நேற்று போராட்டத்தை தொடங்கினர்.

சாலையில் படுத்து தூங்கிய எடியூரப்பா

சாலையில் படுத்து தூங்கிய எடியூரப்பா

இதற்காக சாலையில் அமைக்கப்பட்ட பந்தலில் பகல் நேரத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பந்தலிலேயே எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.

English summary
Former Chief Minister of Karnataka Yeddyurappa protest in Bengaluru. Yeddyurappa was Sleeping on road last night with BJP workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X