பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மங்களூர் வன்முறையில் இறந்த இருவருக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு.. முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: மங்களூர் வன்முறையில் இறந்த இருவருக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Yediyurappa announces Rs 10 lakh compensation for dead protestors

கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் டெல்லி மற்றும் பெங்களூரில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கைது செய்தனர். பல்வேறு பகுதிகளில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா மங்களூரில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ்ஷீன்(23) மற்றும் ஜலீல் (49) ஆகியோ இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர்.

சுடவே இல்லை என்ற நிலையில்.. உ.பி.யில் போராட்டக்கார்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுடும் வீடியோ! சுடவே இல்லை என்ற நிலையில்.. உ.பி.யில் போராட்டக்கார்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுடும் வீடியோ!

மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்னாள் மேயர் அஷ்ரபும் இந்த போராட்டத்தில் படுகாயம் அடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியான இருவரது குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

English summary
Karnataka Chief Minister BS Yediyurappa has announced Rs 10 lakh each as compensation to the families of the two people who died during protests in Mangaluru on December 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X