பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி ரத்து- பாஜக மீது சித்தராமையா பாய்ச்சல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு விழாவாக நடைபெற்று வந்த திப்பு சுல்தான் ஜெயந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

தேசத்தின் விடுதலைப் போராட்ட வீர்ர்களில் மகத்தானவர் திப்பு சுல்தான். ஆங்கிலேய படைகளை குலைநடுங்க வைத்தவர் திப்பு. திப்பு சுல்தான் ராக்கெட்டுகளை தயாரித்து ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல்களை நடத்தினார்.

Yediyurappa Government orders to not celebrate Tipu Jayanti

தமிழகத்தில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர் உள்ளிட்ட மாவீரர்களுக்கு ஹைதர் அலியும் திப்புசுல்தானும்தான் ஆதரவாக இருந்தனர். விடுதலைப் போரின் மாபெரும் வீரனான திப்புசுல்தானுக்கு கர்நாடகா அரசு சார்பாக திப்பு ஜெயந்தி விழா எடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வந்தது.

இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் முதல்வராகியுள்ள எடியூரப்பா, திப்பு ஜெயந்தி விழாக்களை ரத்து செய்துள்ளார். இதற்கு கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், திப்பு சுல்தானை விடுதலைப் போராட்ட வீரராக நாங்கள் பார்க்கிறோம். பாஜகவால் மதச்சார்பின்மை கண்ணோட்டத்துடன் எதையும் அணுகமுடியாது என்றார்.

இதற்கு பதிலளித்த பாஜக எம்.பி ஷோபா கரண்ட்லஜே, திப்பு சுல்தானை பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்தியவர் சித்தராமையா. அவர் எங்களை விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்று பதிலடிதந்தார்.

English summary
Karnataka Chief Minister BS Yediyurappa has ordered to not celebrate Tipu Jayanti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X