பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குமாரசாமியின் ஆட்சி 3 நாட்கள்தான் உயிருடன் இருக்கும்.. பகீர் தகவலை அளித்த எடியூரப்பா

Google Oneindia Tamil News

பெங்களூர்: குமாரசாமியின் ஆட்சி 3 நாட்கள்தான் உயிருடன் இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறியுள்ளார். இவரது கருத்து கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சட்டசபையில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கோவா உள்ளிட்ட மாநிலங்களை போல் பாஜக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயலும் என்பதால் சோனியா முந்தி கொண்டு மஜதவை அணுகினார். இதனால் அங்கு மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.. ஸ்பெஷல் விமானத்தில் பெங்களூர் பறக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.. ஸ்பெஷல் விமானத்தில் பெங்களூர் பறக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்

தொண்டர்கள்

தொண்டர்கள்

இந்த நிலையில் கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி, முக்கிய இலாகா ஒதுக்கீடு போன்றவற்றால் பிரச்சினை வெடித்தது. இதை சமாளிக்க முடியாமல் குமாரசாமி அவ்வப்போது பொதுவெளியில் தொண்டர்கள் மத்தியில் கண்ணீர் விட்டார்.

நுழைய விடாமல்

நுழைய விடாமல்

இந்த நிலையில் மஜத, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து சமாதானப்படுத்த டிகே சிவக்குமார் சென்றிருந்தார். ஆனால் அவர் ஹோட்டலுக்குள் நுழைய விடாமல் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.

பெரும்பான்மை

பெரும்பான்மை

மஜத-காங்கிரஸ் தற்போதைய பெரும்பான்மை 99-ஆக உள்ளது. இந்த நிலையில் பாஜகவின் பலம் 105-ஆக உள்ளது. இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது. இதனால் சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டால் அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்படும்.

கணவரை மீட்க கோரிக்கை

கணவரை மீட்க கோரிக்கை

இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சுதாகர் எம்எல்ஏவின் மனைவி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது தனது கணவரை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

தாக்குதல்

தாக்குதல்

இதையடுத்து விதான் சவுதாவுக்குள் நானும் பாஜகவினரும் வந்து சுதாகர் எம்எல்ஏவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அமைச்சர் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜினாமா

ராஜினாமா

எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருவதால் மாநில அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

2 அல்லது 3 நாட்கள்

2 அல்லது 3 நாட்கள்

கர்நாடக அரசியலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை கட்சி மேலிடம் கூறுகிறது. இதையடுத்து டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்தவுள்ளேன். குமாரசாமியின் அரசு 2 அல்லது 3 நாட்கள் மட்டும்தான் உயிருடன் இருக்கும் என்றார் எடியூரப்பா.

English summary
Karnataka EX CM Yediyurappa says that Kumarasamy's regime will be alive only for 2 to 3 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X