பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4-வது முறை முதல்வரான எடியூரப்பா.. அடடே 'பெரும்பான்மையை நிரூபித்துவிட்டாரே'

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் 11 ஆண்டுகளில் முட்டி மோதி 4-வது முறையாக முதல்வரான எடியூரப்பா இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தே காட்டிவிட்டார். இதனால் எஞ்சிய ஆட்சி காலத்தை சிக்கல் ஏதும் இல்லாமல் அவர் நிறைவு செய்வார் என தெரிகிறது.

கர்நாடகாவில் நிஜலிங்கப்பா, தேவராஜ் அர்ஸ் மற்றும் சித்தராமையா ஆகிய 3 முதல்வர்கள் மட்டும்தான் 5 ஆண்டுகாலம் முழுவதுமாக ஆட்சி செய்துள்ளனர். மற்ற அனைவருமே குறுகிய காலத்தில்தான் முதல்வராக இருந்தவர்கள்.

இவர்களில் எடியூரப்பா 11 ஆண்டுகளில் தற்போது 4-வது முறையாக முதல்வராகியுள்ளார். 2004-ம் ஆண்டு ஜேடிஎஸ் ஆதரவுடன் பல மாத போராட்டங்களுக்குப் பின்னர் எடியூரப்பா முதல்வரானார். ஆனால் 7 நாட்களில் ஜேடிஎஸ் ஆதரவை திரும்பப் பெற வீட்டுக்கு திரும்பினார் எடியூரப்பா.

அதிருப்தி எம்எல்ஏக்களை நடு தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.. சட்டசபையில் குமாரசாமி ஆவேசம் அதிருப்தி எம்எல்ஏக்களை நடு தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.. சட்டசபையில் குமாரசாமி ஆவேசம்

முதல்வர் பதவி ராஜினாமா

முதல்வர் பதவி ராஜினாமா

பின்னர் 2008-ம் ஆண்டு முதல்வரான எடியூரப்பா சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி சிறைக்குப் போனார். இதனால் அப்போதும் முதல்வர் பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை. பின்னர் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 105 இடங்களில் பாஜக வென்றதால் ஆட்சி அமைக்க எடியூரப்பா அழைக்கப்பட்டார்..

ராஜினாமா செய்த எடியூரப்பா

ராஜினாமா செய்த எடியூரப்பா

ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு பெரும்பான்மையை உடனே நிரூபிக்க உத்தரவிட்டது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இரண்டரை நாட்களிலேயே பதவியை பறிகொடுத்தார். இப்படி 3-முறை கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லை கதையாக பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டார் எடியூரப்பா.

வயது காரணமாக தயங்கிய பாஜக

வயது காரணமாக தயங்கிய பாஜக

தற்போது ஜேடிஎஸ்-குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்ட நிலையிலும் கூட எடியூரப்பாவுக்கு பாஜக மேலிடம் உடனே சிக்னல் தரவில்லை. 76வயது என்பதால் பாஜக மேலிடம் ரொம்பவே யோசித்தது. பின்னர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் விதிகளை தளர்ச்சி எடியூரப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிப்பு

எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிப்பு

தற்போது 4-வது முறையாக முதல்வராகி சட்டசபையில் பெரும்பான்மையையும் நிரூபித்துவிட்டார் எடியூரப்பா. ஆனாலும் 5 ஆண்டுகாலம் முழுமையாக இருந்த முதல்வர் என்ற நிலையை இப்போதும் கூட எடியூரப்பாவால் எட்ட முடியாமல் போனது பரிதாபம்தான்.

English summary
Karnataka Chief minister Yediyurappa won trust vote in Assembly via voice vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X