பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’அங்கே’ கரண்ட் வைத்து..கர்நாடகாவில் நடந்த ‘விசாரணை’சம்பவம்! பட்டியலின இளைஞருக்கு இப்படி ஒரு கொடூரமா?

Google Oneindia Tamil News

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் காவல்துறையினர் தன்னை விசாரணைக்கு என அழைத்துச் சென்று அந்தரங்க உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி கொடுமை செய்ததாக பெங்களூரு காவல்துறை மீது பட்டியலின இளைஞர் ஒருவர் பரபரப்பு புகாரினை அளித்துள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் விசாரணை என்ற பெயரில் சிக்கிய நான்கு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் எப்படியெல்லாம் கொடுமை செய்தார்கள் என்பதை மையப்படுத்தி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விசாரணை.

அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி, முருகதாஸ் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் காவல்துறையினர் தங்கள் சுயலாபத்திற்காக அப்பாவி இளைஞர்களை எப்படி எல்லாம் பயன்படுத்தி கொடுமையான அடக்குமுறைகளை கையாண்டார்கள் என்பதை ரத்தம் சதையுமாக இந்த படம் பதிவு செய்திருந்தது.

அகதிகள் முகாம் உள்ளே புகுந்த விஏஓ! இப்படியா? ஒரே கதறல்! அன்புராஜ்க்கு என்னாச்சு தெரியுமா? ஷாக் கரூர் அகதிகள் முகாம் உள்ளே புகுந்த விஏஓ! இப்படியா? ஒரே கதறல்! அன்புராஜ்க்கு என்னாச்சு தெரியுமா? ஷாக் கரூர்

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுகளை பெற்ற இந்த திரைப்படம் பல விருதுகளையும் அள்ளியது இந்த நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. இந்த முறை காவல்துறையின் கோரப்பிடியில் சிக்கியவர் ஒரு பட்டியலின இளைஞர். கர்நாடக மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெங்களூர் காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு இளைஞர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றினை அளித்திருக்கிறார்.

பட்டியலின இளைஞர்

பட்டியலின இளைஞர்

அதில் கடந்த செப்டம்பர் நான்காம் தேதி என்று பெங்களூரு நாராயணபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நின்று கொண்டிருந்த தன்னை காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றதாகவும் காவல்துறை ஆய்வாளர் மெல்வின் என்பவர் உத்தரவின் படி காவலர்கள் தன்னை காவல் நிலையத்தில் மாடிக்கு அழைத்துச் சென்று மரக்கட்டைகள் மற்றும் கிரிக்கெட் பேட்டால் கொடுமையாக தாக்கியதாக கூறியிருக்கிறார்.

மின்சாரம் பாய்ச்சி கொடூரம்

மின்சாரம் பாய்ச்சி கொடூரம்

செப்டம்பர் மாதம் 4 5 6 உள்ளிட்ட மூன்று நாட்கள் தனது அந்தரங்க உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி கொடுமை செய்ததோடு கை கால்களை கட்டி வைத்து ஷூக்களால் மிதித்து கொடுமை செய்தனர் என கூறியிருக்கிறார். மேலும் காவல்துறை சார்பாய்வாளரான சிவராஜ் தனது மார்பில் அமர்ந்துகொண்டு பூட்ஸ் காலால் உதைத்ததாகவும், தன் மீது சிறுநீரை தெளித்து சாதிய வன்கொடுமை மனதோடு நடந்து கொண்டதாக கூறி இருக்கிறார் சுமார் 12 நாட்கள் தன்னை கொடுமை செய்ததோடு அதற்கு பிறகு விடுவித்த பகீர் புகார் சொல்லியிருக்கிறார்.

போலீசார் மிரட்டல்

போலீசார் மிரட்டல்

இது குறித்து வெளியில் சொன்னால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டியதாகவும் அந்த பட்டியயின இளைஞர் கூறியுள்ளார். கர்நாடக மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர் காவல்துறை அதிகாரிகள். சம்பந்தப்பட்ட இளைஞர் கொலை முயற்சி வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டதால் இது போன்ற பொய் புகார்களை அளிப்பதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

English summary
In the Karnataka state, a young man has filed a sensational complaint against the Bengaluru police that the police took him for questioning and subjected him to electric shock in his private parts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X